விடாமுயற்சி:
தமிழ் சினிமாவில் தற்போதைய உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் அஜித். அவரது நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த திரிஷா நடித்துள்ளார்.
பல வருடங்களுக்கு பிறகு இந்த ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இந்த ஜோடியின் காம்போவை திரையில் கண்டு ரசிப்பதற்காகவே ரசிகர்கள் விடாமுயற்சி படத்திற்காக அத்தனை ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். முன்னதாக இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் வந்தான் இயக்குவதாக இருந்தது.
வேளைக்கு ஆகல…
ஆனால் விக்னேஷ் சிவன் கதையில் அஜித்துக்கு திருப்தி இல்லாததால் அவரை தூக்கிவிட்டு மகிழ் திருமேனியை இயக்குனராக போட்டார்கள். அதன் பிறகு மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் இந்த திரைப்படம் வெளிவந்திருக்கிறது.
இதனுடையே இந்த திரைப்படம் இன்று வெளியாகி மோசமான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக எதிர்பார்த்த அளவுக்கு இந்த திரைப்படத்தில் அப்படி ஒன்னும் இல்லை. கதை சுத்த வேஸ்ட்… மத்தபடி அஜித்தின் நடிப்பு எல்லாம் சூப்பர் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
குத்தி காட்டும் விக்னேஷ் சிவன்:
இப்படியான சமயத்தில் விக்னேஷ் சிவன் அப்பாடா இப்பதான் மனசு ரொம்ப திருப்தியா இருக்கிறது என்ற ஒரு தொனியில் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரீஸ் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது… “சில நேரங்களில் நீங்கள் வருத்தப்படுவதை நிறுத்தினாலே போதும்… என்ன மேஜிக்கை செய்ய வேண்டுமோ இந்த யுனிவர்ஸ் அதை உங்களுக்காக நிகழ்த்தி காட்டி விடும்” எனக் கூறியிருக்கிறார்.
அவரின் இந்த பதிவு விடாமுயற்சி படம் பிளாப் ஆகி வேலைக்காகாமல் போனதை தான் இப்படி மறைமுகமாக குத்தி காட்டுகிறார். இப்போதுதான் விக்னேஷ் இவனுக்கு திருப்தியாக நிம்மதியான தூக்கம் வரும் என நெட்டிசன் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். விக்னேஷ் சிவனின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.