டீ,காஃபிக்கு addict ஆகி இருக்கீங்களா!! அப்போ இத தெரிஞ்சிகிட்டு குடிங்க!!

Photo of author

By Janani

நமது சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என டீ மற்றும் காஃபி ஐ குடிக்க ஆரம்பித்து இன்று பலரும் அதற்கு அடிமையாகி இருக்கின்றனர். ஒரு நாளைக்கு கணக்கே இல்லாமல் கூட குடிப்பவர்களும் உள்ளனர். உடல் சுறுசுறுப்புக்கு என தொடங்கி தலைவலி, தூங்கக் கூடாது என்பதற்காக, மன அழுத்தம், சந்தோஷம் என எது வந்தாலும் டீ மற்றும் காஃபி ஐ தான் தேடி செல்கிறோம். அவ்வாறு குடிப்பது நல்லதா? ஒரு நாளைக்கு எத்தனை டீ, காஃபியினை குடிக்கலாம்? என்பது குறித்து காண்போம்.
பொதுவாக காலை எழுந்தது முதல் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது நான்கு டீ மற்றும் காஃபியினை குடிப்பது என்பது ஓரளவிற்கு நல்லது ஆனால் அதற்கு மேல் குடிப்பது கூடாது. நமது உடல் சுறுசுறுப்பை தூண்டக்கூடிய caffeine என்ற பொருள் டீ மற்றும் காஃபிகளில் இருப்பது தான் அனைவரும் இதை குடிப்பதற்கான காரணம்.
டீ மற்றும் காஃபிகளில் ஆன்டிஆக்சிடென்ட்ஸ் இருக்கிறது அது நமது உடம்பிற்கு நல்லது. ஆனால் caffeine என்பதை ஒரு நாளைக்கு 400 மி. கி க்கு மேல் எடுக்கக் கூடாது.200 ml காஃபியில் 80 மி.கி caffeine உள்ளது. அதேபோன்று 200 ml டீ யில் 30-50 மி.கி caffeine உள்ளது. எனவே ஒரு நாளைக்கு 4 முதல் 5 காஃபி குடித்தாலோ,8 முதல் 10 டீ க்கு மேல் கொடுத்தாலோ caffeine நமது உடம்பில் அதிக அளவில் சேர்ந்து விடும்.
டீ மற்றும் காஃபி ஐ அதிக அளவில் குடிப்பதனால் அதிக அளவிலான படபடப்பு, தூக்கமின்மை மற்றும் வாந்தி போன்றவையும் ஏற்படக்கூடும். மேலும் அஜீரணம், இரைப்பை அலர்ஜி, அல்சர் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். ஒரு சிலருக்கு இதற்கு குறைவான அளவில் டீ மற்றும் காஃபியை எடுத்துக் கொண்டாலும் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம். அவ்வாறு இருந்தால் டீ, காஃபியை குறைத்துக் கொள்வது சிறந்தது.
ஒரு சிலர் இவ்வாறு டீ குடிப்பது மட்டுமல்லாமல் அதனுடன் பிஸ்கட், போண்டா, வடை போன்ற நொறுக்குத் தீனிகளையும் சேர்த்து உன்பர். இதனால் உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அதேபோன்று டீ ,காஃபியில் அதிக அளவு சர்க்கரை சேர்த்து குடிப்பவர்களும் உள்ளனர். அவ்வாறு குடிப்பதனாலும் உடல் எடை அதிகரிப்பும், சக்கரை நோயும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே டீ, காஃபியை அளவோடு குடிக்க வேண்டும்.