மோசமான விமர்சனத்தை பெற்ற பேர்ட் கேர்ள் மிகப்பெரும் வெற்றி!!

Photo of author

By Gayathri

சமீபத்தில் பேர்ட் கேர்ள் திரைப்படத்தை விமர்சனம் செய்து பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கி, வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் வழங்கும் இத்திரைப்படம் சமீபத்தில் மிகப்பெரிய ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. இந்த ரோட்டர் டேம் திரைப்பட விழாவில் புதியதாக அறிமுகமாகும் இயக்குனர்களின் முதல் மற்றும் இரண்டாவது படம் மட்டுமே இடம்பெறும். பெரும்பாலும் இவை தேர்வு செய்யும் படங்கள் ஆசிய மற்றும் பசிபிக் பெருங்கடல் சுற்றியுள்ள நாடுகளின் இயக்குனர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

இந்த திரைப்பட விழாவில் நம் தமிழகத்தின் சார்பில் இப்படம் இடம் பெற்றதே பெரும் பெருமைக்குரியது. இதன் மோசமான விமர்சனத்தை முறியடிக்கும் வகையில் தற்சமயம் NETPAC என்கிற உயரிய விருதை ரோட்டர் டேம் சபையில் பெற்றுள்ளது. மேலும், ராமின் பறந்து போ மற்றும் பா. ரஞ்சித்தின் தங்கலான் ஆகியவை லைம்லைட் பிரிவில் இடம்பெற்று இருந்தது. கடந்த ஒரு வாரமாக ரோட்டர் டேம் நிகழ்ச்சி வெவ்வேறு படங்களை ஆராய்ச்சி செய்து, அதில் தனித்துவம் வாய்ந்த படத்திற்கு விருது வழங்கி வருகின்றது. நாம் தமிழகத்தின் சார்பில், திரைக்கு கூட வராத நிலையில் பேட் கேர்ளின் வெற்றி பெரும் பெருமைக்குரியதே.