நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அள்ளி வருகின்றது. சிலர் இப்படத்திற்கு எதிர்மறையான ரிப்போர்ட்டும் கொடுத்து வருகின்றனர். எனினும், அஜித் ரசிகர்களுக்கு இரண்டு வருட சிறைக்கைதிக்கு ஃபுல் மீல்ஸ் கிடைத்தது போன்றே இப்படம் வலம் வந்து வருகின்றது. இதைத் தொடர்ந்து அவருடைய அடுத்த படமான குட் பேட் அக்லீயின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
குட் பேட் அக்லீ படத்தை பார்க்க வேண்டும் என்றால் விக்ஸ் மற்றும் ஹால்ஸ் உங்களுக்கு கட்டாயமாக தேவை என்று அப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஆக பணிபுரிந்துள்ள சுப்ரீம் சுந்தர் கூறியுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் த்ரிஷா, பிரபு, பிரசன்னா மற்றும் அர்ஜுன் தாஸ் போன்றவர்களின் நடிப்பிலும், படக்குழுவின் முயற்சியிலும் உருவாகிக் கொண்டிருக்கும் இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து இருந்தது. விடாமுயற்சி படத்தை காட்டிலும் பத்து மடங்கு இப்படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தை அளிக்கும் என்றும், மேலும் படத்தைப் பார்த்து கத்தி கத்தியே ரசிகர்களுக்கு தொண்டை வலி வந்து விடும். ஆகவே, இப்படத்தை பார்க்கும் பொழுது ரசிகர்கள் நிச்சயமாக ஹால்ஸ் மற்றும் விக்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.