நம் நாட்டில் இந்துக்கள் அனைத்து விஷயங்களையும் வாஸ்து சாஸ்திரப்படி செய்வது வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.கடன் கொடுப்பது,கடன் வாங்குவது,வீடு கட்டுவது,நல்ல விஷயங்களை தொடங்குவது என்று அனைத்திற்கும் ஒரு நேரம் இருக்கிறது.
இதில் வீடு துடைப்பதற்கு கூட நேரம் காலம் பார்க்க வேண்டும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை சுத்தம் செய்தால் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
வீடு சுத்தம் செய்வதை அலட்சியமாக கருதக் கூடாது.வாஸ்துப்படி எந்த விஷயங்களை செய்தாலும் அவை நமக்கு நன்மையே கொடுக்கும்.அந்தவகையில் வாஸ்துப்படி வீடு துடைக்க உரிய நேரம் பிரம்ம முகூர்த்தம் தான்.இது அதிகாலை நேரத்தில் அதாவது சூரியன் உதயமாவதற்கு முன்னர் வரக் கூடிய நேரமாகும்.
இன்னும் சொல்லப்போனால் சூரியன் உதயமாவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் பிரம்ம முகூர்த்த நேரம் தொடங்குகிறது.இந்த நேரத்தில் வீடு துடைப்பது மட்டுமின்றி பூஜை பொருட்கள் சுத்தம் செய்வது பூஜை அறையை சுத்தம் செய்வது போன்றவற்றை செய்யலாம்.
இந்த பிரம்ம முகூர்த்த நாளில் வீட்டை துடைத்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.இந்த நேரத்தில் வீட்டை துடைத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஆனால் நண்பகல் நேரத்தில் வீடு துடைப்பதை தவிர்க்க வேண்டும்.இந்நேரத்தில் வீடு துடைத்தால் வீட்டில் எதிர்மறை சக்தி அதிகரித்துவிடும்.வீடு துடைக்கும் தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்துக் கொண்டால் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
வீட்டை கடிகார திசையில் துடைத்தால் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.வீட்டின் நுழைவாயிலில் இருந்து துடைக்க ஆரம்பிக்க வேண்டும்.இப்படி செய்வதால் வீட்டில் எதிர்மறை சக்தி நுழைவது தடுக்கப்படும்.