சுருட்டை முடியை நேராக்க ஸ்ட்ரெய்ட்னர் வேண்டாம்.. ஒரு பீஸ் தேங்காய் துண்டு இருந்தால் சுருள் நீண்டுவிடும்

Photo of author

By Divya

உங்களுக்கு சுருட்டை முடி இருந்தால் அதை கெமிக்கல் பொருட்கள் இல்லாமல் இயற்கை முறையில் ஸ்ட்ரெய்ட் செய்ய சில குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் துண்டுகள் – ஒரு கப்
2)சோள மாவு – அரை தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு கப் தேங்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு இந்த தேங்காய் பாலை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு இந்த தேங்காய் பாலில் அரை தேக்கரண்டி சோள மாவு சேர்த்து கட்டி பிடிக்காமல் நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.

**இதை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் ஊறவிட வேண்டும்.பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இப்படி வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் சுருட்டை முடி ஸ்ட்ரெய்ட் ஆகும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் துண்டுகள் – ஒரு கப்
2)எலுமிச்சை – ஒன்று

செய்முறை விளக்கம்:-

**தேங்காய் துண்டுகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு தேங்காய் பாலை கிண்ணத்திற்கு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதில் இருந்து சாறு எடுத்து தேங்காய் பாலில் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

**பிறகு இந்த தேங்காய் பாலை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்தால் சுருட்டை முடி நேராகும்.

தேவையான பொருட்கள்:-

1)அரிசி – அரை கப்
2)கற்றாழை துண்டுகள் – கால் கப்

செய்முறை விளக்கம்:-

**கிண்ணத்தில் அரை கப் அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவிடுங்கள்.

**பிறகு தண்ணீரை வடித்துவிட்டு ஊறவைத்த அரிசியை மிக்சர் ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

**இந்த அரிசி மாவை ஒரு கிண்ணத்திற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு அதில் இருந்து ஜெல் எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**இந்த கற்றாழை ஜெல்லை அரிசி மாவில் ஊற்றி கலந்து தலை முழுவதும் அப்ளை செய்ய வேண்டும்.

**பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசி சுத்தம் செய்து வந்தால் சுருட்டை முடி நேராகும்.