கடுகு + கறிவேப்பிலை.. 2 நிமிடத்தில் வெள்ளை முடியை கருமையாக்கும் ஹோம்மேட் ஹேர் டை ரெடி!!

Photo of author

By Divya

Hair Dye: வெள்ளை முடியை இயற்கையான முறையில் கருமையாக்கும் ஹேர் டை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)கடுகு – இரண்டு தேக்கரண்டி
2)சீரகம் – இரண்டு தேக்கரண்டி
3)கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
4)கருஞ்சீரகம் – இரண்டு தேக்கரண்டி
5)கடுகு எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
6)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

அடுத்து மிக்சர் ஜாரில் இரண்டு தேக்கரண்டி கடுகு,இரண்டு தேக்கரண்டி சீரகத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 04:

பின்னர் அடுப்பில் இரும்பு பாத்திரம் வைத்து அரைத்த கறிவேப்பிலை கலவையை போட்டு குறைவான தீயில் வறுக்க வேண்டும்.கலவை நன்றாக கருகி வரும் வரை வறுத்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

ஸ்டெப் 05:

அடுத்து இந்த கலவையை ஒரு கிண்ணத்தில் கொட்டி நன்றாக ஆறவைக்க வேண்டும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் கொட்டி நைஸ் பவுடர் பதத்திற்கு அரைத்து ஒரு ஈரமில்லாத டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 06:

பிறகு இந்த பொடி இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை அதில் போட்டு கலக்க வேண்டும்.

ஸ்டெப் 07:

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெய் ஊற்றி நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.இந்த ஹேர் டையை தலை முழுவதும் மயிர்க்கால்களில் படும்படி தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

ஸ்டெப் 08:

பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசி சுத்தம் செய்தால் வெள்ளை முடி அடர் கருமையாகிவிடும்.

வெள்ளை முடியை கருமையாக்கும் மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை – ஒரு கப்
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு கப் கறிவேப்பிலையை இரும்பு வாணலியில் போட்டு ஒரு நிமிடம் வறுத்து தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

அடுத்து ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

ஸ்டெப் 03:

பிறகு இவை இரண்டையும் நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு நைஸ் பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 04:

பிறகு அடுப்பில் இரும்பு வாணலி வைத்து அரைத்த பொடியை கொட்டி குறைவான தீயில் கருகி வரும் வரை வறுக்க வேண்டும்.

ஸ்டெப் 05:

இந்த பவுடரை ஆறவைத்து கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் கற்றாழை ஜெல் அரை தேக்கரண்டி அளவு சேர்த்து கலக்கவும்.

ஸ்டெப் 06:

பிறகு அரை தேக்கரண்டி கடுகு எண்ணெயை அதில் ஊற்றி நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.இந்த ஹேர் டையை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.அதன் பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசி சுத்தம் செய்ய வேண்டும்.வாரத்திற்கு இருமுறை இந்த ஹேர் டை பயன்படுத்தி வந்தால் வெள்ளை முடி நிரந்தரமாக கருப்பாகும்.