பாடலின் முதல் வரியில் இடம் பெற்ற என் பெயர்!! அன்று நடந்தது இதுதான் நடிகர் சுகுமார்!!

Photo of author

By Gayathri

2004 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படத்தில் காமெடியனாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்ததால் இவர் காதல் சுகுமார் என அழைக்கப்படுகிறார். இவர் முதன்முதலில் 1997 ஆம் ஆண்டு சக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நடிகர் மட்டுமின்றி இயக்குனராகவும் பல படங்களில் வேலை பார்த்திருக்கிறார்.

காதல் அழிவதில்லை படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் நடந்த சில சுவாரசியமான தகவல்களை நடிகர் காதல் சுகுமார் அவர்கள் பகிர்ந்திருக்கிறார். நடிகர் சிம்பு நடிப்பில் அவருடைய தந்தை டி ஆர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் தான் காதல் அழிவதில்லை.

இந்த திரைப்படம் எடுக்கப்பட்ட பொழுது நடந்த சுவாரசியமான தகவல் குறித்து நடிகர் காதல் சுகுமார் அவர்கள் பகிர்ந்திருப்பதாவது :-

காதல் அழிவதில்லை திரைப்படத்திற்கு பாடல் எழுதிக் கொண்டிருந்த பொழுது அதற்கான முதல் வரி மட்டும் சரியாக அமையவில்லை என டி ராஜேந்திரன் அவர்கள் புலம்பி கொண்டு இருந்ததாகவும் அந்த சமயத்தில் காதல் சுகுமார் அந்த இடத்திற்கு சென்றதாகவும் தெரிவித்திருக்கிறார்.

வரிகள் அமையவில்லை என டி ஆர் அவர்கள் தெரிவித்த பொழுது, அதற்கு சுகுமார் என்னுடைய பெயரை முதல்வரியாக வைத்து பாடலை எழுதுங்கள் என விளையாட்டுத்தனமாக கூறியதாகவும் அதனையே டி ஆர் அவர்கள் உண்மையாக்கியதாகவும் நடிகர் காதல் சுகுமார் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

அதாவது காதல் அழிவதில்லை திரைப்படத்தில் வரக்கூடிய பாடலான, ” மாரா மாரா சுகுமாரா ” பாடல் வரிகளை டி ஆர் அவர்கள் நடிகர் காதல் சுகுமாரின் உடைய விளையாட்டுத்தனமான பேச்சை உண்மையாகி காட்டுவதற்காக எழுதிய பாடல் என காதல் சுகுமார் அவர்கள் பகிர்ந்திருக்கிறார்.