பொதுவாக நம் வீட்டில் புறாக்களை அழகுக்காகவும், மன அமைதிக்காகவும் வளர்த்து வருவோம் அல்லது நாம் வளர்க்காமல் கூட சில புறாக்கள் நமது வீட்டிற்கு அடிக்கடி வரலாம். அவ்வாறு புறாக்கள் நம் வீட்டில் இருப்பது நல்லதா? இல்லை கெட்டதா? என நாம் யோசித்து இருக்க மாட்டோம். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு உயிரினம் நம் வீட்டிற்கு வருவது என்பது எவ்வாறு கூறப்படுகிறது என்பது குறித்து காண்போம்.
புறாக்களுக்கு உணவளிப்பதன் மூலம் நம் குடும்பத்தில் உள்ள யாருக்கும் விபத்துக்கள் ஏற்படாது, கொடிய நோய்களும் வராது, தீய சக்திகள் மற்றும் செய்வினை சக்திகள் வீட்டிற்குள் வராது. ஒருவேளை அவ்வாறு தீய சக்திகள் நம் வீட்டிற்குள் வருகிறது என்றால் புறாக்கள் நம் வீட்டில் இருக்காது அல்லது மடிந்து விடும். புறாக்களை நம் வீட்டில் வளர்ப்பதால் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
புறாக்கள் வளர்கின்ற இடங்களில் ஓரளவிற்கு வாழ்க்கையில் நல்ல வசதியோடு வாழ்பவர்கள் ஆகவும், பெருந்தன்மையான குணம் கொண்டவர்களாகவும், பிற உயிர்களை துன்பப்படுத்தாதவர்களாகவும், சூரியன் மற்றும் சந்திரனின் அருளை பெற்றவர்களாகவும் இருப்பார்கள். புறாக்கள் என்பது மகிழ்ச்சியை குறிப்பதாக கூறப்படுகிறது.
எனவே புறாக்கள் நம் வீட்டிற்கு வருகிறது என்றால் நம் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி இன்பமான வாழ்க்கையில் ஈடுபட போகிறோம் என்று அர்த்தம். ஒரு பெண் ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சனி இணைந்து இருந்தால் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து ஆகும் நிலையில் கூட தள்ளப்படும் அத்தகைய குடும்பத்தினர் புறாக்கள் அல்லது சிட்டுக்குருவிகளை அவர்களது வீட்டில் வளர்ப்பதன் மூலம் துன்பங்கள் நீக்கப்பட்டு நன்மைகள் நடைபெறும்.
புறவானது மகாவிஷ்ணுவின் இன்னொரு வாகனமாக கூறப்படுகிறது. எனவே அத்தகைய புறவானது நம் வீட்டிற்கு வரும் பொழுது நம் வீட்டில் செல்வம், கல்வி நிலை, தொழில் முன்னேற்றம், வாழ்க்கை நிலை ஆகிய அனைத்துமே உயரும் என கூறப்படுகிறது. நம் வீட்டிற்கு வரப் போகிற தீய சக்திகளை முன்கூட்டியே எச்சரிக்கும் விதமாகவும் புறா விளங்குகிறது. அதாவது தீய சக்திகள் நம் வீட்டிற்கு வரும் பொழுது அந்த புறாவானது நம் வீட்டை விட்டு சென்றுவிடும் அல்லது இறந்து விடும்.
நம் வீட்டில் உள்ள புறாக்களை தொட்டு நமது கஷ்டங்கள் அல்லது விருப்பங்களை கூறுவது என்பது நம் முன்னோர்கள் அல்லது பெரியோர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்கு சமம். இவ்வாறு செய்வது புறாக்களிடம் மட்டுமின்றி மரம் செடிகள் போன்ற உயிரினங்களிடத்தும் நாம் பேசலாம். எனவே நமது வீட்டில் புறாக்கலோ அல்லது எந்த வித ஜீவன் வளர்ந்தாலும் அது நமக்கு நன்மையை தரும்.