மேஷம்:
சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பது மூலம் மிகச் சிறந்த வாய்ப்புகளை தரக்கூடிய மாதமாக இந்த மாதம் விளங்கும். தேக ஆரோக்கியத்தில் முதுகில் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரம், தொழில், படிப்பு, வாழ்க்கை ஆகிய அனைத்திலுமே முன்னேற்றம் ஏற்படக்கூடிய ஒரு சிறந்த மாதம்.
ரிஷபம்:
இந்த மாதத்தில் கேது பகவானே வழிபடுவது நல்லது. இரத்த அழுத்தத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை மற்றும் தொழில் ரீதியாக அனைத்திலுமே அனுகூலம் தரக்கூடிய மாதமாக இந்த மாதம் சிறந்து விளங்குகிறது.
மிதுனம்:
இந்த மாதம் குரு மற்றும் ராகு பகவானை வழிபாடு செய்வதன் மூலம் மிகப்பெரிய அணுகூலத்தை பெறலாம். உணவு கட்டுப்பாடு மற்றும் கழிவு பாதைகளில் கவனம் தேவை. மேல் அதிகாரிகள் மற்றும் புது உறவுகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியான முன்னேற்றம் அமோகமாக இருக்கும்.
கடகம்:
நவகிரகத்தில் உள்ள செவ்வாயை வழிபடுவது நல்லது. மனக்குழப்பம் மற்றும் நரம்பு தொடர்பானவைகளில் கவனம் தேவை. பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தூக்கமின்மை ஏற்படும். சந்தோஷத்தில் அனுகூலம் உண்டு.
சிம்மம்:
இந்த மாதம் சுக்கிரனை வழிபடுவது நல்லது. கழுத்து பகுதியில் கவனம் தேவை. தொழிலில் விரைவான முன்னேற்றத்தை காண்பீர்கள். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அனைத்து செயல்களிலும் அனுகூலம் கிடைக்கும்.
கன்னி:
புதன் வழிபாடு சிறந்தது. அலர்ஜி சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை. மாசி மாதம் அனைத்து விதத்திலும் அனுகூலத்தை தரக்கூடியதாக இருக்கும். பதட்டம் மற்றும் தூக்கம் இன்மையில் கவனம் தேவை.
துலாம்:
நவகிரகங்களில் உள்ள சந்திரனை வழிபடுவது சிறப்பு. தொழில் ரீதியான தடைகள் அனைத்தும் நீங்கும். வயிறு மற்றும் அஜீரணம் போன்றவைகளில் கவனம் தேவை. குழந்தைகளிடம் கோபத்தை காட்டக்கூடாது. கணவன் மனைவி இடையே நட்பு அதிகரிக்கும். புதிய நபர்களிடம் நம்பிக்கை வைப்பதில் கவனம் தேவை.
விருச்சிகம்:
சூரியன் வழிபாடு சிறப்பை தரும். காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் கவனம் தேவை. பெற்றோர்களிடம் வாக்குவாதம் கூடாது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அனைத்து செயல்களிலும் அனுகூலம் கிடைக்கும்.
தனுசு:
ராகு மற்றும் புதன் வழிபாடு சிறப்பை தரும். மன அழுத்தத்தில் கவனம் தேவை. எல்லா விதத்திலும் ஏற்றம் ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் ஜெயம் கிடைக்கும்.
மகரம்:
இந்த மாதம் சுக்கிரன் வழிபாடு மிகவும் முக்கியம். பல் மற்றும் வயிறு போன்றவைகளில் கவனம் தேவை. வாகனம் மற்றும் குழந்தைகளிடம் கவனம் தேவை. விஷப் பூச்சிகளிடமும் கவனம் தேவை. ஏழரை சனி நீங்க இருப்பதால் அனைத்து விதத்திலும் சற்று கவனம் தேவை.
கும்பம்:
நவகிரகங்களில் செவ்வாய் வழிபாடு சிறப்பை தரும். கணவன் மனைவி உடல் ஆரோக்கியம் மற்றும் பிரச்சனைகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தத்தை குறைத்துக் கொள்வது நல்லது. இந்த மாதம் முழுவதும் அனைத்திலும் கவனம் தேவை.
மீனம்:
குரு வழிபாடு சிறப்பை தரும். சுப விரயம் மற்றும் தொழில் ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் அனைத்திலும் சிறப்பை தரக்கூடியதாக இந்த மாதம் விளங்கும்.