இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தப் பணத்திற்காக தினமும் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஓட வேண்டி இருக்கிறது. ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவசியமான ஒன்றாக பணம் மாறி வருகிறது. அதாவது கல்லறைக்குப் போகும் வரை சில்லறை தேவை என்றாகிவிட்டது.
இவ்வாறு பணத்திற்காக ஒருவரின் கீழ் வேலை செய்கிறோம் அல்லது சொந்தமாக ஏதேனும் ஒரு தொழிலையோ நிறுவனத்தையோ வைத்து வேலை பார்த்து வருகிறோம். அவ்வாறு வேலை செய்கையில் நாம் சம்பாதிக்கும் பணமானது நம் கையில் தங்க வேண்டும், நாம் உழைக்கும் அளவிற்கு ஏற்ற ஊதியம் நமக்கு கிடைக்க வேண்டும், தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும், காரியம் வெற்றி அடைய வேண்டும் என நினைப்பவர்கள் இந்த ஐந்து பொருட்களை உங்கள் வீட்டின் பூஜையறையிலோ அல்லது தொழில் புரியும் இடத்திலோ வைத்தால் அனைத்து காரியங்களிலும் ஜெயம் உண்டாகும் மேலும் பண ஈர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
1- வெட்டிவேர், 2- வசம்பு 9,3- கிழங்கு மஞ்சள் 9,4-பச்சைக் கற்பூரம்,5-கருங்காலிக் கட்டை அல்லது வெண்கடுகு ஆகிய ஐந்து பொருட்களையும் ஒரு மஞ்சள் துணியில் கட்டி உங்கள் வீட்டின் பூஜை அறையிலோ அல்லது தொழில் புரியும் இடத்திலோ வைக்கலாம். அதனுடன் சேர்த்து ரூ 51 அல்லது 101 என வைத்து என்ன காரியம் வெற்றி அடைய வேண்டுமோ அதனை ஒரு பேப்பரில் எழுதி, வீட்டில் உள்ள அனைவரின் பெயர் நட்சத்திரம் ஆகியவற்றையும் எழுதி அந்த மஞ்சள் துணியில் கட்டி வைக்க வேண்டும்.
இவ்வாறு வைத்து அதிகபட்சம் ஒரு 45 நாட்களுக்குள் நினைத்த காரியம் வெற்றி அடையும் என்பது ஜோதிடர்களின் கருத்து. யாரிடம் ஆவது கொடுத்த பணம் திரும்ப நம் கைக்கு வரவில்லை என்று கருதினாலும் கூட அல்லது வேறு எந்த காரியம் வெற்றி அடைய வேண்டுமோ அதற்காகவும் இந்த பரிகாரத்தினை செய்யலாம்.
வளர்பிறை நாட்களில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சுக்கிர ஹோரையில் இவ்வாறு மஞ்சள் துணியில் கட்டி பூஜை அறையில் வைக்க வேண்டும். அதற்கு தினமும் மஞ்சள் குங்குமம் இட்டு ஏதேனும் ஒரு பூவினை வைத்து தினமும் வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் என்ன நினைத்து எழுதி அந்த மஞ்சள் துணியில் கட்டி வைத்துள்ளோமோ அது அனைத்தும் வெற்றி அடையும் என்பது ஜோதிட சாஸ்திரம்.