பொதுவாகவே சனீஸ்வரர் என்ற பெயரை கேட்டாலே அனைவருக்கும் ஒரு விதமான பயம் ஏற்படும். ஆனால் அவர்தான் நவகிரகங்களிலேயே ஈஸ்வரர் என்ற பட்டத்தினை பெற்றவர். இந்த கிரகங்கள் நமக்கு எப்போது இன்பத்தை தரும் அல்லது துன்பத்தை தரும் என்பதை நாம் ஆராயக்கூடாது.
ஏனென்றால் சனீஸ்வரர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்கிறார் என்றால், அவருக்கு துன்பத்தை தர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு மாறுவதில்லை. அவரவர் செய்த கர்மாவிற்கு வினையாகவே இன்பங்களும், துன்பங்களும் ஒருவரது வாழ்க்கையில் நடக்கும்.
எனவே நாம் செய்த கர்மாவிற்கு வினையாகவே அவர் நமக்கு இன்பங்களோ, துன்பங்களோ அளிக்கிறார். அவ்வாறு இருக்கையில் அவரிடமே சென்று முறையிடுவது என்பது தவறு. கொஞ்சம் பலரும் ஏழரை சனி ஜென்ம சனி போன்ற சனியில் இருந்து விடுபடுவதற்கு என்று திருநள்ளாறு செல்கிறோம். அவ்வாறு சென்று சனீஸ்வர பகவானை வழிபாடு செய்கிறோமே தவிர அங்கு உள்ள தர்பாரன்னேஸ்வரர் சுவாமியை வழிபாடு செய்வதில்லை.
அங்கு உள்ள தர்பாரன்னேஸ்வரர் சுவாமி தான் சனியை அடக்கி ஆள்பவர். எனவே சனியின் பிடியிலிருந்து விலக வேண்டுமானால் சனி பகவானின் குருவான தர்பாரன்னேஸ்வரரை வழிபாடு செய்வதன் மூலமே விடுபட முடியும். எனவே ஒரு பிரச்சனை என்றால் பிரச்சனைக்கு உரியவரிடம் விடையை கேட்பதுடன் அவரின் தலைவரிடம் அந்த பிரச்சினைக்கான தீர்வை வழங்குமாறு கேட்க வேண்டும்.
இதேபோன்று வேறு எந்த தெய்வத்திடம் வழிபட்டால் சனியின் பிடியிலிருந்து விலக முடியும் என்பதை பார்ப்போம். சூரிய பகவானை வழிபாடு செய்வதன் மூலம் சனியின் பிடியிலிருந்து விலக முடியும். காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பதன் மூலமும் சனியின் பிடியிலிருந்து விலக முடியும்.
இரும்பு அகல் விளக்கை பயன்படுத்தி கோவில்களில் தீபம் ஏற்றுவதும் சனியின் பிடியிலிருந்து விலகுவதற்கான வாய்ப்பு. ஆனால் இரும்பு அகல் விளக்கை வீட்டில் ஏற்றக்கூடாது. வன்னி மர இலைகளினால் மாலை செய்து ஈஸ்வரன் சுவாமிக்கு சனிக்கிழமை அன்று வழிபாடு செய்து அர்ச்சனை செய்வது சனியின் பிடியில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.
சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதும் சிறந்தது. அதேபோன்று ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி வெண்ணெய் படைத்ததும் சிறந்தது. கால பைரவருக்கு வழிபாடு செய்வதும் சிறந்தது.
அனாதை இல்லங்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நம்மால் முடிந்த உதவிகளை செய்து வருவதும் சிறப்பை தரும். சனி மகா பிரதோஷம் அன்றும் விரதம் இருந்து வழிபடலாம். அதேபோன்று சித்தர்கள் வழிபாடும், அன்னதானம் செய்வதும் நமக்கு சிறப்பை தேடித்தரும்.
புரட்டாசி சனிக்கிழமை அன்றும் வழிபாடு செய்வதும் நல்லது. எள் தீபம் ஆலயங்களில் ஏற்றி வழிபடுவதும் சிறப்பை தரும். வீட்டில் செய்யக்கூடிய வழிபாடு என்றால் காகத்திற்கு சாதம் வைப்பது மட்டுமே அதை தவிர மற்ற அனைத்தையும் ஆலயங்களில் செய்வது நல்லது.