ADMK: அதிமுக-வானது கூடிய விரைவில் செங்கோட்டையன் வசம் வர அதிக வாய்ப்புள்ளதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் மூலம் தகவல் கசிந்துள்ளது. எம்ஜிஆர் காலத்திலிருந்து ஜெயலலிதா காலம் வரை அவருக்கு தளபதியாக செயல்பட்டு வந்த செங்கோட்டையன் ஒரு கட்டத்தில் ஒதுக்கி வைக்கப்படும் சூழல் உண்டானது. இருப்பினும் முக்கிய பொறுப்புகள் பதவிகள் என அனைத்தும் இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் எடப்பாடி ஆட்சிக்கு பிறகு இவரிடமிருந்த அனைத்து கௌரவிக்க பதவிகளும் பறிக்கப்பட்டு தான் வந்தது.
அதிலும் இவரை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காகவே இவருக்கு கீழிருக்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் இவருக்கு மேலான பதவி கொடுப்பது அவர்களுக்கு இவரை வேலை வாங்குவது என கட்சி ரீதியாக செய்து வந்துள்ளனர். இவருக்கும் சரியான வாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்தி ரிவெஞ் கொடுத்து விடலாம் என எண்ணி வந்துள்ளார். அப்படிப்பட்ட நிலையில் தான் தற்பொழுது எடப்பாடி அத்திக்கடவு பாராட்டு விழா இவருக்கு பலமாக சிக்கியது. இந்த விழாவை நேரடியாக புறக்கணிப்பு செய்தது மட்டுமின்றி டெல்லியின் வசமும் பேசி வருகிறார்.
முன்னதாக டெல்லி தலைமையகம் வேலு மணியை வைத்து தூது அனுப்பி பார்த்தது, அது ஏதும் பழிக்காததால் தற்பொழுது செங்கோட்டையனை தலைமையில் உட்காரவைக்கும் அளவிற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஒருங்கிணைந்த அதிமுகவிற்கு எடப்பாடி ஒப்புக் கொள்ளாத பட்சத்தில், மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடத்தி செங்கோட்டையன் தலைவராக அமர்த்தி எடப்பாடி வெளியேற்றவும் அதிக வாய்ப்புள்ளதாம். இதற்கான காலக்கெடுவை எடப்பாடிக்கு ஜெயலலிதாவின் பிறந்தநாள் வரை தான் கொடுத்துள்ளனர்.
மேலும் பொதுக்குழு கூட்டம் அமைத்து நிர்வாகிகளை தன் வசம் இழுக்கும் பொருட்டு அதன் வேலைகளை கமுக்கமாக சசிகலா, பன்னீர்செல்வம், டிடிவி, தினகரன் உள்ளிட்டோம் செய்து ருகிறார்களாம். இதற்காக மற்ற எம்எல்ஏ பொறுப்பாளர் முன்னிட்டு அவர்களின் ஆதரவை பெறுவதற்காக தனிப்பட்ட பரிசை சசிகலா சார்பாக தயார் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.