இதெல்லாம் ஒரு பொழப்பா.. விஜய்யை மிஞ்ச ரஜினி-யை அப்பட்டமாக காப்பி அடித்த CM!!

Photo of author

By Rupa

இதெல்லாம் ஒரு பொழப்பா.. விஜய்யை மிஞ்ச ரஜினி-யை அப்பட்டமாக காப்பி அடித்த CM!!

Rupa

Updated on:

chief-minister-stalin-sat-on-rajini-ketap-and-answered-many-questions-on-your-oruvan-show-which-is-currently-trending-on-the-internet

DMK: உங்களின் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ரஜினி கெட்டப்பில் அமர்ந்து பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளது தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தன்வசம் மக்கள் வைத்துள்ள அதிருப்த்தியை நீக்க பல முயற்சிகளில் திமுக இறங்கியுள்ளது. அதில் ஒன்று தான் மக்களுடன் மக்களாக உங்களில் நான் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அதில் மக்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் முதல்வர் முன்னிலையில் வைக்கப்படும்.

அதற்கேற்றவாறு மக்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலை அளித்து வருவார். அந்த வகையில் இம்முறை அவரது கெட்டப்பானது சினிமா படப்பானியில் குறிப்பாக ரஜினியின் ஜெயிலர் படத்தில், அவர் எந்த கெட்டப்பில் இருந்தாரோ அதே வெள்ளை சட்டை காக்கி பேண்ட் கண்ணாடியுடன் பேட்டி அளித்துள்ளார். மேலும் அந்தப் படத்தின் பாட்டானது இவரது வீடியோக்கு பின்னணியில் இணைக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே பொம்மை முதலமைச்சர் என்று கூறிவந்த நிலையில் உங்களில் ஒருவன் நிகழ்ச்சியை மக்களில் ஒருவனாக சாமானியனாக காட்டுவதை விட்டுவிட்டு ஹீரோயிஸ்ட்டை காட்டுவது எந்த விதத்தில் நியாயம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதைக் கூட சுயமாக சிந்திக்க முடியாமல் அரசியல் செய்ய வந்து விட்டாரா என்று பல விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். அதேபோல இதில் வைக்கப்பட்ட கேள்விகள் ஏதும் மக்களிடமிருந்து வந்தது போல் தெரியவில்லை. இவர்களாகவே கேள்விப்பட்டியலை தயாரித்து பதில் பாட்டியலையும் அவரது கையில் கொடுத்துள்ளனர். இது குறித்து அண்ணாமலை கூட முதல்வருக்கு தான் டப்பிங் தேவை எங்களுக்கு கிடையாது என்று விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய்-க்கு போட்டியாக அரசியல் களத்தில் சினிமா நாடகம் நடத்த முதல்வர் முயற்சிகிறார என்றும் கேட்டு வருகின்றனர்.