NTK TVK: நாம் தமிழர் கட்சியில் சமீப காலமாக ஒவ்வொரு நிர்வாகியும் சீமான் மீது குற்றம் சாட்டி கட்சியை விட்டு விலகி வருகின்றனர். அந்த வகையில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் கட்சியை விட்டு விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சீமான் நிகழ்ச்சி ஒன்றில் காளியம்மாளெல்லாம் ஓர் பிசிறு என்று கீழ்த்தரமாக பேசி இருப்பார். இவ்வாறு அவர் பேசியது காளியம்மாளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பொருட்டு கட்சியை விட்டு இவர் கட்டாயம் விலகி விடுவார் என்ற பேச்சு அடிபட்டது.
ஆனால் இது குறித்த அவரிடம் முதலில் கேள்வி எழுப்பும்போது இல்லை என்று மறுத்து வந்தார். தற்சமயம் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணையும் நிகழ்ச்சி ஒன்றில் இவரது பெயரானது பொறுப்பாளர் என்ற பதவி ஏதும் குறிப்பிடாமல் சமூக செயற்பாட்டாளர் என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது இது கட்சி சார்ந்த நிகழ்ச்சி கிடையாது. அதனால் எனது பெயர் அதன் பொறுப்பு என எதையும் குறிப்பிடவில்லை என தெரிவித்தார்.
அதேபோல் கட்சி விட்டு விலகாதது குறித்து நானே அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். இவர் கூறுவதை வைத்து பார்த்தால் மற்ற அரசியல்வாதிகளின் பெயர் அனைத்தும் அவர்களின் பொறுப்புடன் அச்சடிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் மட்டும் ஏன் இவரது பொறுப்பை உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் கட்சியை விட்டு விலக மாட்டேன் என்று கூறாமல் நானே அதன் அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சீமான் உறவை முடித்துக் கொண்டவர்கள் பலரும் விஜய்யுடன் கைகோர்த்து வருகின்றனர். அதன் வரிசையில் தற்பொழுது நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக அடுத்த மாதம் நடக்கப்படும் நிகழ்ச்சியில் இவரது பெயரானது நாம் தமிழர் கட்சி பொறுப்பில் இருப்பதை குறித்து குறிப்பிடாமல் இருப்பது தான் எனக் கூறுகின்றனர்.