CBSE: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை தமிழகத்திற்கு வரக்கூடாது என்று முழுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மும்மொழி கொள்கையை கட்டாயம் ஏற்க முடியாது என ஆளும் கட்சி முதல் இதர கட்சிகள் வரை மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்கள் எழுப்பி உள்ளனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் திடீரென்று மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இனிவரும் கால கட்டங்களில் சிபிஎஸ்சி பள்ளி நிறுவனங்களை கொண்டு வருவதற்காக மாநில அரசிடம் எந்த ஒரு அனுமதியும் கேட்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.
பழைய சட்ட திட்டத்தை ரத்து செய்து இந்த புதிய அறிவிப்பு வெளியிட்டிருப்பது முற்றிலும் பாஜக எதிர்ப்பு மாநிலங்களை பழி வாங்குவதற்காக தான் எனக் கூறுகின்றனர். இவ்வாறு அனுமதி பெறாமல் மத்திய அரசு அனுமதி மட்டும் கிடைத்தால் ஒரு மாநிலத்தில் மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடர்ந்து அதிகரிக்க கூடும். இதன் பின்னணி காரணமாக பார்க்கப்படுவது, பாஜகவின் வித்யாலயா பள்ளிகள் பெருத்த எண்ணிக்கையில் முன்வந்து நிற்கும். அந்தவகையில் இந்த திட்டத்திற்கு முக்கிய காரணம் மோடியாக தான் இருப்பார் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த புதிய சட்ட விதிமுறையை தமிழகம் போல் பாஜகவை எதிர்க்கும் அனைத்தும் மாநிலங்களுக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது. மும்மொழி கொள்கையை ஏற்க முடியவில்லை என்றால் என்ன?? எங்களது பள்ளி கல்வி நிறுவனங்களை அதிகரித்து அதன் மூலம் மாணவர்களிடம் மும்மொழியை திணிப்போம் என்ற பானியில் இதனை கொண்டு வந்துள்ளனர் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.