தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாக்கியுள்ளது. இதற்கான கல்வி தகுதி விண்ணப்பிக்கும் முறை தேர்வு முறை குறித்த விவரங்களை கீழே காணலாம்.
காலியாக உள்ள பணியிடங்கள் :-
✓ திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை 1 – 2 காலி பணியிடங்கள்
✓ திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை 2 – 1 காலி பணியிடம்
தற்பொழுது இந்த மூன்று காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் தான் வெளியாகி உள்ளன.
கல்வித் தகுதி :-
✓ திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை 1 :- சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் பொறியியல், உயிர் தொழில்நுட்பம் அல்லது மேனேஜ்மெண்ட் துறைகளில் முதுகலை பட்டம் பெற்றெடுத்தல் அவசியம். மேலும் 6 ஆண்டுகள் பணி முன் அனுபவம் மற்றும் கணினி அறிவு.
✓ திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை 2 :- சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் பொறியியல், உயிர் தொழில்நுட்பம் அல்லது மேனேஜ்மெண்ட் போன்றவற்றில் முதுகலை பட்டம் மற்றும் 4 ஆண்டுகள் பணி முன் அனுபவம். கணினி கற்றறித்தல் அவசியம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சம்பள விவரம் :-
திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை 1 க்கு 70000 ரூபாய் சம்பளம் எனவும் திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை 2 க்கு 50000 ரூபாய் சம்பளம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை :-
இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் https://tnpcb.gov.in/என்ற அரசினுடைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் இவ்வாறு விண்ணப்பிப்பவர்களை தேர்வு செய்து ஜிமெயில் அல்லது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.