பிரபல முண்ணனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் மொழியில் எண்ணற்ற படங்களை முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். இவருக்கு மிகப்பெரிய பேன்ஸ் கேங்சும் இருந்தனர். அதன் பிறகு தான் பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருந்தார். அதன் பிறகு தமிழ் படத்தின் மீது அவருக்கு பெரும் நாட்டம் காணப்படவில்லை. அவர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருந்தார். அந்த காதல் தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளன. ஜான்வி கபூர் தெலுங்கில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
எதிர்பாராத விதமாக வெளிநாட்டிற்கு சென்றிருந்த ஸ்ரீதேவி அவர்கள் திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு தேசிய கொடி போற்றி அவரது இறுதி சடங்கு நடைபெற்று இருந்தது. அவர் முன்பு ஒரு முறை அளித்திருந்த பேட்டியானது சமீபத்தில் வைரலாக தொடங்கியுள்ளது. நான் திருமணத்திற்கு பின்பு என் வேலை உண்டு, நான் உண்டு என்று இருப்பேன். அவரும் குடும்பத்துடன் பெரும்பாலான நேரத்தை கழிப்பார். எங்கள் குழந்தை வளர்ப்பில் நாங்கள் எந்த குறையும் வைக்கவில்லை. நான் பாலிவுட்டில் சரளமாக இந்தி பேசுவதற்கு என் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களிடம் பேசி தான் கற்றுக் கொண்டேன் என்று மனம் திறந்து உள்ளார். என்னதான் பெரிய நடிகையாக இருந்தாலும் அவர் மனம் திறந்து, பணியாளர்களிடம் கற்றேன் என்று ஓபனாக பேசி இருப்பது தற்சமயம் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.