வீடு கட்டுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் வர்ணம் பூசுவதும் முக்கியம்.நமது வீட்டை அழகாக மாற்றுவது அழகு வர்ணங்கள் தான்.இது அழகிற்கு மட்டுமின்றி நம் வீட்டு சுவற்றையும் அரிக்காமல் பாதுகாக்கிறது.
அந்த காலத்தில் சுண்ணாம்பு தான் நம் வீட்டை அலங்கரிக்கும் பெயிண்ட்டாக இருந்தது.ஆனால் இன்று பல பெய்ண்ட்ஸ் மார்க்கெட்டில் கிடைக்கிறது.சிலர் வாஸ்துவிற்கு ஏற்ற பெயிண்ட் அடிப்பார்கள்.சிலர் தங்களுக்கு பிடித்த விருப்பமான பெயிண்ட் அடிபார்கக்ள்.இன்னும் சிலர் பிறரின் யோசனையை கேட்டு வர்ணம் பூசுவார்கள்.எது எப்படி இருந்தாலும் நம் வீட்டிற்கு சரியான வர்ணம் பூசினால் தான் பார்க்க லுக்காக இருக்கும்.
சில தரமற்ற பெய்ண்ட்ஸ் அடித்தால் அவை சில மாதங்களிலேயே உரிந்து வந்துவிடும்.நீங்கள் அடிக்கும் பெயிண்ட் நீடித்து உழைக்க சரியானவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.முதலில் உங்கள் வீட்டிற்கு பெயிண்ட் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் அதற்கு முதலில் உரிய காலநிலையை தேர்வு செய்ய வேண்டும்.
பெயிண்ட் செய்ய கோடை காலம் சிறந்தவையாகும்.வீட்டிற்கு பெயிண்ட் செய்வதற்கு முன் சுவற்றின் மேற்பரப்பில் உள்ள அழுக்குகள் மற்றும் பழைய பெயிண்ட்களை நீக்க வேண்டும்.சுவற்றில் மேடு பள்ளங்கள் போன்று பழைய பெய்ண்ட்ஸ் இருந்தால் புதிய பெய்ண்ட்ஸ் அடிக்கும் பொழுது அது சுவற்றின் அழகை கெடுத்துவிடும்.
சுற்றில் உள்ள பெய்ண்ட்ஸ் நீடித்து உழைக்க வேண்டுமென்றால் நீங்கள் தரமான வண்ணம் வாங்கி பூச வேண்டும்.பழைய பெயிண்ட் மேல் புதிய வண்ணம் பூசுவதை தவிர்க்க வேண்டும்.நீங்கள் வீட்டு சுவற்றிற்கு வண்ணம் பூசுவதற்கு முன்னர் ப்ரைமர் பூச வேண்டும்.அப்பொழுது தான் பெயிண்ட் உரிந்து வராமல் இருக்கும்.ஒருவேளை பழைய மற்றும் புது பெயிண்டிற்கு ப்ரைமர் ஒன்று தான் என்றால் புதிதாக ப்ரைமர் அடிக்க தேவையில்லை.நீங்கள் வீட்டிற்கு பெயிண்ட் செய்கிறீர்கள் என்றால் இந்த விஷயங்களை நிச்சயம் கவனியுங்கள்.