தலைமுடியின் நீளம் அதிகரிக்க வேண்டுமா? அப்போ தேங்காய் எண்ணையில் இந்த பொருளை சேர்த்துக்கோங்க!!

Photo of author

By Divya

தலைமுடியின் நீளம் அதிகரிக்க வேண்டுமா? அப்போ தேங்காய் எண்ணையில் இந்த பொருளை சேர்த்துக்கோங்க!!

Divya

பெண்கள் தங்கள் தலைமுடியின் நீளத்தை அதிகரிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணையை தயாரித்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம் – இரண்டு தேக்கரண்டி
2)வெந்தயம் – இரண்டு தேக்கரண்டி
3)இலவங்கம் – இரண்டு தேக்கரண்டி
4)வைட்டமின் ஈ மாத்திரை – இரண்டு
5)விளக்கெண்ணெய் – 20 மில்லி
6)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி

செய்முறை விளக்கம்:-

படி 01:

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து இரண்டு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.இதை ஒரு தட்டில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

படி 02:

அடுத்து இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

படி 03:

பின்னர் இரண்டு தேக்கரண்டி இலவங்கத்தை வாணலியில் போட்டு வறுத்து மூன்று பொருட்களையும் நன்றாக ஆறவைக்க வேண்டும்.

படி 04:

பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

படி 05:

பிறகு இந்த எண்ணையை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்க வேண்டும்.தேங்காய் எண்ணெய் நன்கு ஆறிய பிறகு அரைத்த பெருஞ்சீரக கலவையை அதில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

படி 06:

அதன் பிறகு இரண்டு வைட்டமின் ஈ மாத்திரையை அதில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் குட்டை முடியின் நீளம் அதிகரிக்கும்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
3)கற்றாழை துண்டு – பத்து
4)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

படி 01:

அடுப்பில் பாத்திரம் வைத்து 250 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

படி 02:

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயம்,ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

படி 03:

அடுத்து ஒரு சிறிய கற்றாழை மடலை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு காய்ச்ச வேண்டும்.

படி 04:

இந்த எண்ணெயை ஆறவைத்து வடித்து தலைக்கு தடவி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.