CHEMICAL PEEL சிகிச்சையை வீட்டில் செய்யலாமா? கெமிக்கல் பீல் மூலம் நிறத்தை மாற்ற முடியுமா?

Photo of author

By Divya

CHEMICAL PEEL சிகிச்சையை வீட்டில் செய்யலாமா? கெமிக்கல் பீல் மூலம் நிறத்தை மாற்ற முடியுமா?

Divya

நமது தோலின் வெளிப்புற அடுக்குகளை இரசாயனக் கரைசல் கொண்டு நீக்கி செயற்கை நிறத்தை பெறுவதை தான் கெமிக்கல் பீல் என்கின்றோம்.இந்த சிகிச்சை மூலம் சருமத்தில் உள்ள பருக்கள்,வயதான தோற்றம் போன்ற பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம்.

இந்த இராசயன தோல் உரித்தல் சிகிச்சைகள் பல வகைகளில் உள்ளது.அதாவது லாக்டிக் பீல்,மேம்பட்ட உதடு உரித்தல்,கிளைக்கோலிக் பீல்,சாலிசிலிக் பீல்,ஆர்கி பீல் போன்ற கெமிக்கல் பீல் செய்யப்படுகிறது.

கெமிக்கல் பீல் சிகிச்சை பலன்கள்:

1)சருமத்தில் உள்ள கரடுமுரடான திட்டுக்கள் அகற்றப்பட்டு தோல் மென்மையாகிறது.தோல் நிறத்தை மாற்றுகிறது.

2)முகப்பருக்களை இந்த கெமிக்கல் பீல் சிகிச்சை மூலம் குறைக்க முடியும்.சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள இந்த சிகிச்சை உதவுகிறது.

தகுதி வாய்ந்த நிபுணர்கள் அதாவது உரிமம் பெற்ற நிபுணர்களிடம் மட்டுமே இந்த கெமிக்கல் பீல் சிகிச்சையை பெற வேண்டும்.இந்த சிகிச்சை மூலம் சருமத்தை பராமரிக்க முடியும்.ஒவ்வொரு கெமிக்கல் பீல் சிகிச்சைக்கு ஆகும் செலவு மாறுபடும்.இந்த கெமிக்கல் பீல் சிகிச்சை அனைத்து சருமங்களுக்கும் பொருந்தும்.இருப்பினும் இந்த சிகிச்சைக்கு பிறகு சிலருக்கு தோல் நிறம் கருப்பாக வாய்ப்பிருக்கிருக்கிறது.எனவே இந்த கெமிக்கல் பீல் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டியது முக்கியம்.

நமது வீட்டிலேயே இயற்கையான முறையில் நம் சருமத்தை பராமரிக்கலாம்.அதாவது நமது சருமத்தில் உள்ள முகப்பருக்கள் மற்றும் கரடுமுரடான திட்டுகள் நீங்கி மிருதுவாகவும்,பொலிவாகவும் இருக்க வைட்டமின் சி அவசியமான ஒன்றாகும்.எலுமிச்சை,ஆரஞ்சு போன்ற பழங்களில் வைட்டமின் சி அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த பழங்களை சாறாக பருக வேண்டும்.அதேபோல் இந்த பழங்களை கலவையாக அரைத்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் சருமம் பொலிவாக இருக்கும்.

சருமத்திற்கு ஒருவித Glow கிடைக்க தினமும் இளம் வெயிலில் சிறிது நேரம் நடக்க வேண்டும்.பிறகு பருக்கள் வராமல் இருக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.தற்பொழுது ஆன்லைனில் கெமிக்கல் பீல் சொல்யூசன் கிடைக்கிறது.இதை பயன்படுத்துவதற்கு முன்னர் தோல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு யூஸ் பண்ணலாம்.