மலையாள திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரையுலகையும் ஒரு காலகட்டத்தில் தன் வசப்படுத்தி இருந்த நடிகர் இவர். ஒரு காலத்தில் என்பதை விட இப்பொழுது கூட இவருக்கான ரசிகர்கள் படை இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட இவர் தன்னைவிட ஒரு சிறந்த நடிகர் இருப்பதாகவும் அவர் தற்பொழுது தனக்கு போட்டியாளராக மாறி இருப்பதாகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக ரஜினி கமல் போன்றவர்கள் இருக்கும் பொழுது சமீபத்தில் சினிமா துறையில் நுழைந்த நடிகர் ஒருவரை மம்முட்டி அவர்கள் தனக்கு போட்டியாளர் என குறிப்பிட்டு இருப்பது பலரது கவனத்தை ஈர்த்து வருவதாக அமைந்திருக்கிறது.
சமீபத்தில் பாவா செல்லதுரை அவர்களை சந்தித்த மம்முட்டி அவரிடம் பேசியிருப்பதாவது :-
எப்பொழுதுமே ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அது திரைப்படத்தின் கதாபாத்திரம் மற்றும் கதையை நன்கு உணர்ந்து அதன் பின் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு அந்த கதைக்கு உயிர் கொடுக்கக்கூடியவராக திகழக்கூடியவர் நடிகர் மம்முட்டி. தன்னுடைய நடிப்பில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாது பிறருடைய நடிப்பு நன்றாக இருந்தது என்றால் அதனை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளக்கூடிய தைரியமும் இவரிடம் அதிக அளவில் இருக்கிறது. அப்படியாகத்தான் இவர் பாவா செல்லதுரை அவர்களை நேரில் சந்தித்த பொழுது தனக்கு ஒரு போட்டியாளர் உருவாக்கி விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
கூத்துப்பட்ட ரயிலிருந்து தமிழ் சினிமா துறைக்குள் நுழைந்த ஒரு சாதாரண நடிகர் மலையாளத்தில் மின்னல் முரளி என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்திருக்கிறார். அவர்தான் சமீபத்தில் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த திரைப்படமான பாட்டில் ராதா திரைப்படத்தின் கதாநாயகன் குரு சோமசுந்தரம். மலையாளத்தில் இவர் இந்த ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்தது என்பது மலையாள மக்கள் அனைவருடைய மனதிலும் இவர் மட்டுமே இருப்பதாகவும் இவரைப் பற்றிய மக்கள் அதிக அளவில் பேசிக்கொள்வதாகவும் மம்முட்டி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
இவர் இந்த திரைப்படங்கள் இன்றி மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்றும் அவர் நடித்த திரைப்படங்களில் இவருடைய நடிப்பு மட்டும் வருவது தனித்துவ தன்மையுடைய இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இவருக்கு நடிப்பு என்பது அவருடைய ரத்தத்தில் உரிய ஒன்றாக இருப்பதாகவும் தற்பொழுது சினிமா துறையில் தனக்கு போட்டியாக இவர் உருவெடுத்து இருக்கிறார் என்று மம்மூட்டி அவர்கள் பேசியிருப்பது குரு சோமசுந்தரம் அவர்களின் நடிப்பு எந்த அளவிற்கு மக்களிடையே வெளிப்பட்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்தக்கூடிய ஒரு விஷயமாக அமைந்திருக்கிறது.