பொதுவாக சினிமாத்துறையில் நுழையும் பொழுது ஒருவித மனநிலையுடன் நுழையக்கூடியவர்கள் சில நாட்களுக்குப் பின் அந்த மனநிலையை மறந்து வேறொரு மனநிலையை உருவாக்கிக் கொண்டு அதற்கேற்றபடி வாழ தொடங்கி விடுகின்றனர். அதிலும் குறிப்பாக நான் இப்படித்தான் நடிப்பேன் என தன்னுடைய ஆரம்பகால படங்களில் கூறிவிட்டு அதன் பின் கதைக்காகவும் படத்திற்காகவும் கிளாமராகவும் முத்த காட்சிகளிலும் நடிக்க கூடியவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் இப்பொழுது நாம் பார்க்கக் கூடியவர்கள் என்ன நடந்தாலும் சரி இத்தனைக்கு பட வாய்ப்பு வரவில்லை என்றாலும் சரி ஆனால் கிளாமராகவோ முத்த காட்சிகளிலோ கட்டாயமாக நடிக்க மாட்டோம் என இறுதிவரை தங்களுடைய முடிவிலிருந்து விலகாமல் இருந்தவர்கள்.
✓ நதியா :-
சரீனா அனூஷா மோய்டு என்ற இயற்பெயர் கொண்ட இவர் 1984 முதல் 1994ம் ஆண்டு வரை கதாநாயகியாகவும் அதன் பின்பு தற்பொழுது வரை துணை கதாபாத்திரகளில் அடித்து வருகிறார்.
✓ சங்கீதா :-
குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கிய இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக குழந்தை நட்சத்திர முதல் கதை நாயகி வரை 50 திரைப்படங்கள் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
✓ சுவலட்சுமி :-
கொல்கத்தாவில் பிறந்த வங்காள நடிகையாக இருப்பினும் தமிழ் திரையுலகில் சிறந்த கதாநாயகியாக வலம் வந்தவர் இவர். இவர் தமிழ் மொழி மட்டுமன்றி மலையாளம் வங்காளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார்.
✓ சுஹாசினி :-
இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியான இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன்னுடைய சினிமா துறையில் வாழ்க்கையை துவங்கி சின்னத்திரைகளிலிருந்து வெள்ளி திரைக்கு என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர். கதாநாயகியாக தொகுப்பாளராக இயக்குனராக தயாரிப்பாளராக என இவருக்கு பன்முகங்கள் உண்டு.
✓ ரேவதி :-
5 முறை சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் அவார்டை வாங்கி இவர் முதலில் தொலைக்காட்சி தொடர்களில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர். அதன் பின்பு வெள்ளி திரைக்கு வந்த இவர் அனைத்து உச்ச நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். ஹிந்தி ஆங்கிலம் போன்ற மொழிகளில் பல படங்களை இவர் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
✓ தேவயாணி :-
சுஷ்மா என்ற இயற்பெயரை கொண்டவர் நடிகை இவர். தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் தொலைக்காட்சியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
✓ ஷாலினி :-
குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் நுழைந்தவர் நடிகை ஷாலினி. தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்து அதன் பின் கேரியர் பிரேக் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாள மொழி படங்கள் நடிக்க துவங்கிய இவர் நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்து கொண்ட பின் சினிமா துறைக்கு வருவதைப் பற்றி நினைத்து கூட பார்ப்பதில்லை.
✓ சாய் பல்லவி :-
தென்னிந்தியா நடிகை மற்றும் நடன இயக்குனராக வலம் வரக்கூடிய இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் கதாபாத்திரத்திற்காக அதிக அளவு ரசிகர்களை பற்றி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
மேற்கூறிய கதாநாயகிகள் அனைவரும் தமிழ் சினிமா துறையில் கிளாமரில் தாங்கள் நடிக்க மாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்து விடுகின்றனர். ஒருவேளை படத்திற்கு தேவைப்படுகிறது என்றால் அப்படிப்பட்ட படம் தங்களுக்கு தேவை இல்லை எனக் கூற கூடிய தைரியமானது இவர்களிடம் அதிகமாக இருக்கிறது.