இளமை பருவத்தில் இருக்கும் அழகு வயதாகும் பொழுது குறைந்துவிடுகிறது.முகத்தில் சுருக்கம் வருதல்,வறட்சி தென்படுதல் போன்றவை வயதாவதால் ஏற்படுகிறது என்றாலும் நாம் சருமத்தை முறையாக பராமரிக்கவில்லை என்றால் இளமையிலேயே அவற்றை சந்திக்க நேரிடும்.
இளமை காலத்தில் உங்கள் முகம் ஆரோக்கியமற்றதாக மாறினால் கடுமையான சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.வயதான பிறகு உங்கள் சருமம் இளமையாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் சில விஷயங்களை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும்.
மீண்டும் உங்கள் சருமத்தில் இளமை துளிர்விட நீங்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்:
1)காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.அதேபோல் வெது வெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் எளிதில் நீங்கிவிடும்.
2)இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட கற்றாழை ஜெல்,ஹெர்பல் பேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவி சுத்தம் செய்யலாம்.
3)முகத்தில் ஈரப்பதம் தக்கவைக்க வெளியில் செல்லும் பொழுது சண்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம்.
4)இரவு தூங்குவதற்கு முன் முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.காய்ச்சாத பாலில் முகத்தை கழுவினால் பொலிவு கிடைக்கும்.
5)இரவில் தேங்காய் எண்ணெய் கொண்டு சருமத்திற்கு மசாஜ் செய்தால் சரும சுருக்கம் ஏற்படுவது கட்டுப்படும்.
6)வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை ஹெர்பல் பேஸ் மாஸ்க் பயன்படுத்த வேண்டும்.
7)உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.இரவு நேரத்தில் நன்றாக உறங்க வேண்டும்.
8)மகிழ்ச்சி தரும் விஷயங்களை செய்ய வேண்டும்.தங்களுக்காக நேரத்தை செலவிட வேண்டும்.மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ரஇரசாயன பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
9)ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.தினமும் ஏதேனும் ஒரு பழத்தை உட்கொள்ள வேண்டும்.நடைபயிற்சி,யோகா போன்றவற்றை செய்ய வேண்டும்.இதை தொடர்ந்து பின்பற்றி வந்தால் வயதான பிறகும் இளமை தோற்றத்துடன் வலம் வரலாம்.