வெயில் காலத்தில் முகம் டல்லடிக்காமல் இருக்கணுமா? அப்போ இதை அப்ளை பண்ணுங்க!!

Photo of author

By Divya

வெயில் காலத்தில் முகம் டல்லடிக்காமல் இருக்கணுமா? அப்போ இதை அப்ளை பண்ணுங்க!!

Divya

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் பலருக்கும் ஏற்படுகிறது.கரும்புள்ளிகள்,பருக்கள்,கருந்திட்டுக்கள்,எண்ணெய் பசை போன்றவை இந்த கோடை காலத்தில் அதிகமாக ஏற்படுகிறது.

என்னதான் முகத்தை கெமிக்கல் க்ரீம் போட்டு மறைத்தாலும் கொளுத்தும் வெளியிலால் எந்த பயனும் ஏற்படுவதில்லை.கோடை கால வெப்பத்தில் இருந்து தங்கள் சருமத்தை காத்துக் கொள்ள விரும்புபவர்கள் இந்த அழகு குறிப்பை பின்பற்றலாம்.

தேவையான பொருட்கள்:-

1)தயிர் – இரண்டு தேக்கரண்டி
2)பீட்ரூட்(சிறியது) – ஒன்று
3)கடலை மாவு – இரண்டு தேக்கரண்டி
4)அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு அதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 02:

அதன் பின்னர் மிக்சர் ஜாரில் இந்த பீட்ரூட் துண்டுகளை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

அதன் பின்னர் இந்த பீட்ரூட் சாறை கிண்ணம் ஒன்றிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 04:

அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு மற்றும் இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து சுத்தமான நீரில் க்ளீன் செய்ய வேண்டும்.இந்த பீட்ரூட் பேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சரும நிறம் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பீட்ரூட் – ஒன்று
2)தேன் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு அதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

அடுத்து இந்த பீட்ரூட் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

பின்னர் இந்த பீட்ரூட் பேஸ்டை கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.இந்த பேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சரும நிறம் அதிகரிக்கும்.