கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் நயன்தாரா. சம்பளம் அதிகம் வாங்கினாலும் அவரின் படங்கள் சரியாக ஓடுவதில்லை. அவர் நடிப்பில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல், அன்னப்பூரணி போன்ற படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, சினிமா அல்லாத மற்ற சில தொழிகளிலும் அவர் முதலீடு செய்திருக்கிறார். ஒருபக்கம், தனது இரண்டு குழந்தைகளை கவனித்துக்கொள்ளவும் அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது.
நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் அவருடன் 10க்கும் மேற்பட்டோர் வருகிறார்களாம். அவர்களுக்கெல்லாம் மிகவும் அதிகமான சம்பளத்தை கொடுக்க சொல்கிறாராம். இதனாலேயே நயன்தாராவை படத்தில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்கள் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் குழந்தைகள் இருப்பதால் சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த வேண்டும், வெளியூருக்கு வரமாட்டேன் என்றெல்லாம் சொல்கிறாராம்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் நடிக்க போயிருக்கிறார். மொத்தம் 8 மணி நேரம் நடித்தால் போதும். அதாவது ஒரு நாளில் எடுக்கப்பட்டுவிடும். ஆனால், ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே நடிப்பேன். எனவே, 2 நாட்கள் ஷூட்டிங்கை நடத்துங்கள் என சொல்லி 2 நாட்களுக்கான பில்லை போட்டிருக்கிறார். அதோடு, அவரோடு நடிப்பவர்களுக்கும் 2 நாட்கள் சம்பளம் என சொல்லிவிட்டதால் அவர்களும் குஷியாகிவிட்டார்களாம்.
திடீரென, ஒரு நாளிலேயே நடித்து கொடுக்கிறேன் என சொல்லி 2 நாளுக்கான சம்பளத்தை வாங்கிக்கொண்டாராம். அதேநேரம் உடன் வந்தவர்களுக்கு ஒரு நாளுக்கான சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், மற்ற நடிகைகள் அப்செட் ஆகியிருக்கிறார்கள். அதோடு, யாரும் ஷெட்டில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என சொல்லிவிட்டு அவர் மட்டும் செல்போன் பயன்படுத்துகிறாராம்.