இனிமேல் UPI, ATM மூலம் PF பணத்தை எடுக்கலாம்!.. மகிழ்ச்சி செய்தி!…

Photo of author

By Murugan

இனிமேல் UPI, ATM மூலம் PF பணத்தை எடுக்கலாம்!.. மகிழ்ச்சி செய்தி!…

Murugan

upi and atm

வருங்கால வைப்பு நிதி என்பது பல வருடங்களாக நடைமுறையில் இருக்கும் ஒன்று. அதாவது ஒரு நிறுவனத்தில் ஒருவர் பணிபுரியும் போது அவரின் சம்பள தொகையிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் பிடித்து செய்யப்பட்டு அதே அளவிலான தொகை நிறுவனத்தில் செலுத்தப்பட்டு இரண்டு தொகையும் சேர்த்து சம்பந்தப்பட்ட நபரின் பி.எப் கணக்கில் வரவு வைக்கப்படும். சில நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் சம்பளத்தில் இருந்து மட்டுமே குறிப்பிட்ட தொகையை பி.எப் கணக்கில் செலுத்துவார்கள். நிறுவனத்திற்கு நிறுவனம் இது மாறுபடும்.

அந்த நபர் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும்போதே அல்லது அவருக்கு தேவைப்படும்போதே அந்த பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகிறது. குறிப்பாக கல்வி அறிவு அதிகம் இல்லாதவர்கள், பி.எப் பணத்தை எப்படி எடுப்பது என்பது தெரியாதவர்கள் தொகையை எடுக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். இதில் பல மோசடிகளும் நடந்து வருகிறது. ‘உங்கள் பி.எப் பணத்தை நான் எடுத்து தருகிறேன்’ என சொல்லி சிலர் ஏமாற்றி அதை அவர்களின் வங்கி கணக்கில் எடுத்துக்கொள்வதும் நிறைய நடந்து வருகிறது.

pf

இதுபோக, பி.எப் பணத்தை ஆன்லைனில் எடுக்க வைக்கப்படும் கோரிக்கை அடிக்கடி நிராகரிக்கப்படுகிறது. இதனால், தேவையான நேரத்திற்கு பணத்தை எடுக்க முடியாமல் பலரும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே, பி.எப். பணத்தை சுலபமாக எடுப்பதற்காக மத்திய அரசு ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்யவிருக்கிறது.

அதாவது, இனிமேல் UPI மற்றும் ATM வழியாக கூட ஒருவர் தன்னுடைய பி.எப். பணத்தை உடனடியாக எடுக்கும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால் மிகவும் சுலபமாகவும், விரைவாகவும் ஒருவர் தன்னுடைய பி.எப் பணத்தை எந்த சிக்கலும் இன்றி எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.