காதல் கடிதம் தீட்டவே!.. காதல் நிறைவேறக்கோரி கோவில் உண்டியலில் எழுதி போட்ட இளம்பெண்!..

Photo of author

By அசோக்

காதல் கடிதம் தீட்டவே!.. காதல் நிறைவேறக்கோரி கோவில் உண்டியலில் எழுதி போட்ட இளம்பெண்!..

அசோக்

love letter

காதல் என்பது பொதுவான உணர்வு. உலகம் முழுவதும் உள்ள எல்லோரிடமும் காதல் இருக்கிறது. காதல்தான் இந்த உலகையே இயக்குகிறது எனவும் சொல்வார்கள். அதேநேரம் காதல் அனுபவம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கும் என சொல்ல முடியாது. சிலருக்கு காதல் வெற்றி பெற்று மகிழ்ச்சியில் முடியும். பலருக்கும் அது தோல்வியில் முடிவதும் உண்டு. இரு தரப்பில் சம்மதம் பெற்று காதலர்கள் திருமணம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் அமையாது.

ஏதோ காரணங்களால் அது நடக்காமல் போய் பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்து கொண்டு வாழ்பவர்கள் பலர். அப்படி நடக்கும்போது காதல் என்பது வெறும் அழகான, மறக்க முடியாத நினைவுகளாவோ இருந்துவிடும். இதை காதல் தோல்வி என்று சிலர் சொல்வார்கள். சிலரோ காதலுக்கு தோல்வியே இல்லை. காதல் உணர்வு ஒருவரின் மனதில் இருக்கும்வரை அது தோல்வி இல்லை எனவும் சிலர் சொல்வதுண்டு.

பொதுவாக காதலிக்கும் பெண்ணின் சம்மதத்தையோ, அவரின் பெற்றோரின் சம்மதத்தையோ பெறுவதற்கு ஆண்கள் போராடுவார்கள். பெண் சம்மதம் சொன்னாலும் அவரின் பெற்றோரை சம்மதிக்க வைப்பது என்பது சுலபமில்லை. அதற்கு சில வருடங்கள் கூட ஆகலாம். அப்படி சில வருடங்கள் காத்திருந்து சம்மதம் வாங்கி திருமணம் செய்து கொண்டவர்கள் பலரும் இருக்கிறார்கள்.

ஆனால், தான் நேசிக்கும் காதலன் தன்னை விட்டு போய் விடக்கூடாது என சொல்லி கோரிக்கை வைத்து ஒரு பெண் கோவில் உண்டியலில் எழுதிப்போட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா மாநிலம் சிக்க திருப்பதி கோவிலில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அவர் எழுதியுள்ள கடிதத்தில் ‘என்னையும் என் காதலனையும் விரைவில் சேர்த்து வை கடவுளே, அவர் என்னை விட்டு போகாமல் இருக்க இன்னும் அதிகமாக நேசிக்க வை. நான் அவரை எப்படி உணர்கிறானோ அதுபோல் அவரும் என்னைப்பற்றி உணர வேண்டும்’ என குறிப்பிட்டிருக்கிறார். கோவில் உண்டியலை பணம் எண்ண திறந்தபோது இந்த கடிதம் அதிகாரிகளின் கண்ணில் பட்டிருக்கிறது.