எனக்கு இதுதான் நடந்தது!. பாடகி கல்பனா வெளியிட்ட பரபரப்பு வீடியோ…

Photo of author

By Murugan

எனக்கு இதுதான் நடந்தது!. பாடகி கல்பனா வெளியிட்ட பரபரப்பு வீடியோ…

Murugan

kalpana

Singer kalpana: 1500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடகி கல்பனா. பல படங்களுக்கு டிராக் பாடியிருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் இடம் பெற்ற கொடி பாக்குற காலம் பாடலை பாடியதும் கல்பனாதான். மேலும், விஜய் டியில் ஒளிபரப்பாகும் ஸ்டார் சிங்கர் மற்றும் ஸ்டார் சிங்கர் ஜுனியர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருந்தவர் இவர்.தமிழ் மட்டுமில்லாமல் பல தெலுங்கு படங்களிலும் பாடியிருக்கிறார். அதோடு, தெலுங்கு மொழி டிவி நிகழ்ச்சிகளிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளுக்கு ஜட்சாக இருந்தார்.

இவர் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். இந்நிலையில்தான், சமீபத்தில் வீட்டில் மயங்கிய நிலையில் போலீசாரால் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. ஒருபக்கம், கல்பனாவுக்கும் அவரின் கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அவர் பிரிந்து சென்றுவிட்டதாகவும், மன உளைச்சலில்தான் கல்பனா தற்கொலை செய்யும் முடிவை எடுத்தார் எனவும் சிலர் பேசினார்கள்.

kalpana

ஆனால், அவரின் மகள் இதை மறுத்தார். இன்னும் 2 நாட்களில் என் அம்மா டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார். அவருக்கும் என் அப்பாவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. உடல்நலப்பிரச்சனை காரணமாக அவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார். அது கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிவிட்டது. அதனால் மயக்கமடைந்தார். அவர் நன்றாக இருக்கிறார். அவரை பற்றி வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்நிலையில்தான், இதுபற்றி கல்பனவே விளக்கம் அளித்துள்ளர். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘நான் நன்றாக இருக்கிறேன். நான் பி.எச்.டி உள்ளிட்ட பல பட்ட படிப்புகளை படித்து வருகிறேன். அது இல்லாமல் இசை தொடர்பான பணிகளையும் செய்து வருகிறேன். எனவே, கடந்த சில வருடங்களாகவே எனக்கு சரியான தூக்கம் இல்லை. எனவே, மருத்துவரின் அறிவுரை படி சிகிச்சை பெற்று வருகிறேன். தூக்க மாத்திரையின் டோஸ் அதிகமாகிவிட்டதால் மயங்கிவிட்டேன். எனது கணவர் வெளியூரில் இருந்தும் போலீசாரின் உதவியுடன் என்ன காப்பாற்றினார். எனக்கும், அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம். எனக்கு நல்ல கணவரும், மகளும் கிடைத்துள்ளனர். எனக்காக பிரார்த்தனை செய்த எல்லோருக்கும் நன்றி’ என பேசியிருக்கிறார்.