பாஜக ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக, ராஜ தந்திரியாக இருந்தவர்தான் அமித்ஷா. குஜராத்தில் மூன்று முறை தொடர்ந்து ஆட்சியை அமைத்த நரேந்திர மோடியை பிரதமராக்க ஸ்கெட்ச் போட்டவர் இவர்தான். சமூகவலைத்தளஙக்ளில் மோடியை புரமோட் செய்யவே பல நூறு கோடிகளை செலவு செய்தார்கள். இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். காங்கிரஸ் பலவீனமாக இருந்த நேரத்தை பயன்பத்தி குறி வைத்து அடித்து ‘மோடி வந்தால்தான் நாட்டை காப்பாற்ற முடியும்’ என்கிற உணர்வை சமூகவலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தினார் அமித்ஷா.
இது அவர்களுக்கு தேர்தலில் நன்றாகவே கை கொடுத்தது நரேந்திர மோடியும் பிரதமரானர். அதன்பின் இப்போது வரை தொடார்ந்து 3வது முறை மோடி பிரதமராகியுள்ளார். பிரதமர் பதவியில் மோடி இருந்தாலும் எல்லாவற்றையும் தீர்மானிப்பது, பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் அந்த கட்சியை காலூன்ற வைப்பது என எல்லாவற்றையும் செய்து வருபவர் அமித்ஷாதான். குறிப்பாக தமிழகத்தில் பாஜகவை வலுவாக்க அவர் பல திட்டங்களை போட்டார்.
அதில் ஓரளவுக்கு அவர் வெற்றியும் பெற்றார். தமிழகத்தில் குறிப்பிட்ட சதவீத ஓட்டுக்களை பாஜக வாங்கி வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் வருவதால் தமிழகத்தில் அதிக ஓட்டுக்களை வாங்க பாஜக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார்கள். தேர்தல் வரும்போது அமித்ஷாவும் அடிக்கடி தமிழகம் வந்து சில தொகுதிகளில் பேசி பிரச்சாரம் செய்வார். அந்தவகையில் விரைவில் ராணிப்பேட்டைக்கு வரவிருக்கிறார்.
இந்நிலையில், ராணிப்போட்டையில் சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அமித்ஷாவுக்கு பதில் இயக்குனரும், நடிகருமான சந்தானபாரதி புகைப்படத்தை அச்சிட்டு ‘இந்தியாவின் இரும்பு மனிதரே.. வாழும் வரலாறே.. வருக வருக..’ என எழுதியிருக்கிறார்கள். இதற்கு முன்பும் பலமுறை அமித்ஷாவுக்கு பதில் சந்தான பாரதி புகைப்படத்தை பயன்படுத்திய போஸ்டர்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.