DMK: அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை விடாது பின் துரத்தியே வருகிறது. அதிமுக கட்சியில் இவர் இருந்த போது அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததில் ஓர் ஆண்டுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் வெளியே வந்ததும் திமுக இவருக்கு மீண்டும் மகுடம் சூட்டி அழகு பார்த்தது. ஆனால் இதனை அமலாக்கத்துறை சிறிதும் கூட ஒப்புக்கொள்ள முடியாமல் மீண்டும் இவருக்கு எதிராக பல மனுக்களை உயர்நீதிமன்றத்தில் அளித்தது.
அதில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது எப்படி பதவி கொடுக்கலாம் அது சாட்சிகளை கலைக்க ஏதுவாக அமைந்து விடாதா?? என தொடர்ந்து குமுறி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கடந்த இரண்டு நாட்களாக செந்தில் பாலாஜி சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் அவர் நெருங்கிய நண்பர் மற்றும் அரசு ஒப்பந்ததாரருமான எம்சிஏ சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்துள்ளது. இவரைத் தொடர்ந்து கொங்கு மெஸ் மற்றும் சக்தி மெஸ் உரிமையாளர்களின் வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து தொடர் 11 மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனை நடந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய மதுபான ஆலைகளிலும் சோதனை செய்து வருகின்றனர். தற்போது வரை செய்யப்பட்ட சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மதுபான ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களிலும் அரசு டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் எண்ணிக்கையிலும் பெருமளவில் மாற்றம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் இந்த சோதனை நடப்பதாக தெரிவித்துள்ளனர்.
கட்டாயம் இதன் பின்னணியில் செந்தில் பாலாஜி வசமாக சிக்க அதிக வாய்ப்புள்ளதால் திமுக சற்று பதற்றத்தோடு காணப்படுகிறது. அவ்வாறு சூழல் அமையும் போது இவரது பதவி பறிபோக அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.