உங்கள் சோர்வான முகத்தை பிரகாசமாக மற்றும் ஹோம்மேட் க்ரீம் தயார் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)தயிர் – இரண்டு தேக்கரண்டி
2)ஆரஞ்சு தோல் பவுடர் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
1.கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி பிரஸ் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2.அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி ஆரஞ்சு தோல் பவுடரை அதில் போட்டு நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
இந்த ஆரஞ்சு தோல் பவுடர் அழகு பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.இல்லையேல் ஆரஞ்சு தோலை காயவைத்து பொடித்து வைத்து பயன்படுத்தலாம்.
3.தயிரில் இந்த ஆரஞ்சு தோல் பவுடர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கி கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து வந்தால் சருமப் பொலிவு அதிகரிக்கும்.
சருமத்தை பொலிவாக்கும் மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:-
1)தயிர் – ஒரு தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
1.முதலில் ஒரு தேக்கரண்டி கெட்டி தயிரை கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை தயிரில் பிழிந்து கொள்ள வேண்டும்.
2.இந்த கலவையை நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இதை முகத்திற்கு அப்ளை செய்து நன்கு ஸ்க்ரப் செய்ய வேண்டும்.இந்த தயிர் கலவையை வாரம் மூன்று முறை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவாகும்.
தேவையான பொருட்கள்:-
1)தயிர் – இரண்டு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
3)முல்தானி மெட்டி – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
1.கிண்ணம் ஒன்றை எடுத்து தயிர் இரண்டு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் கால் தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.
2.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி முல்தானி மெட்டி சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து முகத்திற்கு அப்ளை செய்ய வேண்டும்.இதை தொடர்ந்து வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பயன்படுத்தி வந்தால் சருமம் பொலிவு பெறும்.அதேபோல் முகத்திற்கு வெறும் தயிர் மட்டும் பயன்படுத்தி வந்தால் முகப் பொலிவு அதிகரிக்கும்.