தர்மபுரியில் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்ம செல்வன் மீது தொடர்ந்து புகார் வந்த வண்ணமாகவே உள்ளது. ஸ்டாலினுக்கு மாற்றுக் கட்சிகள் கொடுக்கும் அழுத்தத்தை காட்டிலும் உட்கட்சியின் மோதல் தான் அதிக தலைவலி என்று அவரே கூறியுள்ளார். அந்தவகையில் நிர்வாகிகள் யாரேனும் வார்த்தையை விட்டு பெரிய சர்ச்சையாகி விடுகிறது. இல்லையென்றால் கட்சிக்குள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பேசி வருகின்றனர்.
அதேபோல ஒன்றுதான் தற்போது தர்மபுரி கிழக்கு தொகுதியில் நடந்து வருகிறது. மாவட்ட செயலாளராக தர்மசெல்வனுக்கு பதவி கொடுத்ததும் தலைகனமானது அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. இதன் உச்சகட்டமாக அம் மாவட்டத்தின் கலெக்டரையே மிரட்டி உள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகியது மட்டுமல்லாமல் அந்த மாவட்ட கலெக்டர் ஸ்டாலினிடம் முறையிட்டுள்ளார். பின்பு ஸ்டாலின் தர்மசெல்வனை நேரடியாக அழைத்து முதல் முறை வார்னிங் கொடுத்து அனுப்பினார்.
அச்சமயத்திலேயே தர்மபுரி திமுக நிர்வாகிகள், இவரால் கட்சிக்கு கலங்கம் உண்டாகிறது என்று கருத்து தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். தலைமையை சந்தித்த கையோடு தர்மசெல்வன் கழக நிர்வாகிகளை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் எனக்கு எதிராக நான் பேசும் வீடியோக்களை இணையத்தில் விடுவது போன்றவற்றை ஏதும் செய்யக்கூடாது, அது எனக்கு எதிரான அரசியல் செய்வது போல தான். மேற்கொண்டு இவ்வாறு செய்பவர்கள் பதவியிலிருந்து நீக்கி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
சற்றும் அசராத நிர்வாகிகள், எங்களை உங்களால் தூக்கிவிட முடியுமா?? பதவிக்கு ஏற்றார் போல் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். நாங்களெல்லாம் சேர்ந்து உங்கள் பதவியை தூக்குகிறோம் என்று பேசி கூட்டத்தை புறக்கணித்தனர். நிர்வாகிகள் எடுத்த நடவடிக்கையை கண்டு அதிர்ந்த தர்மசெல்வன் மீண்டும் அவர்களை சமாதானப்படுத்த முயன்றும் முயற்சி வீணானது. நிர்வாகிகள் அனைவரும் இணைந்து தலைமைக்கு மீண்டும் புகார் அளிக்க ஆரம்பித்து விட்டனர். தற்சமயம் இவரது பதவி பறிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என தர்மபுரி வட்டாரம் கூறுகின்றனர்.