Chennai: நகராட்சி மாநகராட்சி ஊராட்சி போன்றவற்றில் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்கள் பட்டா வழங்குமாறு தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இது குறித்து பல போராட்டங்களும் நடந்துள்ளது இதனை பரிசீலனை செய்து தமிழக அரசு சமீபத்தில் இது குறித்து பட்டா வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அமைச்சரவையிலும் இது குறித்து கிட்டத்தட்ட நான்கு மாவட்டங்களில் பட்டா வழங்கப்படும் என்று ஒப்புதல் வழங்கினர்.
தற்பொழுது சென்னையில் எந்த இடத்தில் இருப்பவர்களுக்கு எந்த வரைமுறையின் கீழ் பட்டா வழங்கப்படும் என்பது குறித்து வருவாய்த்துறை செயலாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்னையில் பெல்ட் ஏரியாக்களில் வசித்து வரும் குறிப்பாக ஐந்து வருடத்திற்கு மேல் இருப்பவர்கள் 29 ஆயிரத்து 187 பேருக்கும் மதுரை நெல்லை உள்ளிட்ட மாநகர் மற்றும் நகராட்சி பகுதிகளில் இருப்பவர்களுக்கு 57 ஆயிரம் பேருக்கும் பட்டம் வழங்குவதாக தற்போது தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் சென்னையில் தாம்பரம் ஆவடி போன்ற பகுதிகளில் ஒரு சென்ட் நிலம் மட்டும் இலவசமாக தருவதாகவும் மேற்கொண்டு ஒரு சென்ட் நிலத்திற்கான பணத்தை வசிப்பவர்கள் கொடுக்க வேண்டும்.இதுவே மாற்று மாவட்டங்களில் இரண்டு செண்ட் நிலம் இலவசமாகும் மேலும் ஒரு சென்ட் நிலத்திற்கு வசிப்பவர்கள் அதனுடைய தொகையை கொடுக்க வேண்டும். இதே போல தான் ஊராட்சி பகுதி ரீதியாக விண்ணப்பிப்பவருக்கும் பொருந்தும்.
அதேபோல இந்த இலவச நிலமானது மூன்று லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நிலத்திற்குரிய பணம் கொடுத்து பட்டா பெற்றுக் கொள்ளலாம். அதேபோல பதிவு செய்வது முதல் நிலத்துக்கான மதிப்புத் தொகையை நிர்ணயிப்பது வரை இது குறித்த அனைத்து தரவுகளுக்கும் கண்காணிப்பு குழு அமைக்கப்படும் அதன் கீழ் இந்த திட்டமானது செயல்படுத்தப்படும்.
மேலும் இந்த திட்டத்திற்கு ஆண்டு இறுதிவரை கால அவகாசம் கொடுத்துள்ளதால் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்படுத்திக் கொள்ளும்படி கூறியுள்ளனர். அதே சமயம் நீர் நிலைகளில் ஏதேனும் வீடு கட்டப்பட்டு இருந்தாலும் அதற்கு பட்டா கேட்டால் கட்டாயம் வழங்கப்படாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர் .