நடிகர் விஜய் அரசியலுக்கு பின்னர் திமுகவை மட்டுமே குறி வைத்து பேசி வருகிறார். கட்சி சார்பாக நடத்தப்பட்ட முதல் மாநாட்டில் கூட ‘அவங்க (பாஜக) பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா?’ என நக்கலடித்தார். அதாவது பாஜகவை பாசிசம்னு சொல்ற நீங்க மட்டும் என்ன ஒழுங்கா?’ என்பது போல பேசியிருந்தார். அப்போது கூட பாஜக என கட்சியின் பெயரை அவர் சொல்லவில்லை. நமது கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்பதை கூட வெளிப்படையாக அவர் சொல்லவில்லை.
அதன்பின் மும்மொழிக்கொள்கை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையில் கூட பாஜக என அவர் குறிப்பிடவில்லை. நேற்று மகளிர் தினம் தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவிலும் மகளிருக்கு பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை அகற்றுவோம் என பேசியிருந்தார். ஆனால், தேசிய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சம்பவங்களை பற்றி அவர் பேசவில்லை.
இந்நிலையில், பிரபல யுடியூபர் மற்றும் சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் தனது எக்ஸ் தளத்தில் பின்வருமாறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
பாசிசம் தான் எனக்கு பாயாசம்:
* மகளிர் தின வாழ்த்து சொன்னபோது பெண்களுக்கு பாதுகாப்பு தராத திமுக ஆட்சியை 2026ல் அகற்றுவோம் என்கிறார் விஜய்.
* திமுகவும், பாஜகவும் சம்மான எதிரிகள் என்பதும் இவர்தான்.
* ஹிஜாப் அணிந்து மாணவிகள் பள்ளிக்கு வருவதை எதிர்ப்பது யார்?
* நீட் தேர்வு எழுத வரும் மாணவிகளின் கம்மல், தாலி, துப்பட்டா உட்பட அனைத்தையும் சோதனையிட சொல்வது யார்?
* பூங்காவில் இருக்கும் காதலர்களை அடித்து விரட்டுவது யார்?
* இஸ்லாமியரை அவரது மனைவி கண் முன்னே அடித்து ஜெய்ஶ்ரீராம் என சொல்ல சொன்னது யார்?
* ஒரு இஸ்லாமியருக்கு கூட எம்.பி.சீட் தராத தேசிய கட்சி எது?
* மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை நிகழ்த்தியது யார்?
* தமிழக கல்லூரி மாணவிகளை.. அவர்களின் ஆசிரியை மூலம் தன் இருப்பிடத்திற்கு அவ்வப்போது வரவழைத்தவர் யார்?
பெண்களுக்கு எதிரான இந்த செயல்களுக்கு காரணமாக இருக்கும் ஆட்சியையும் அகற்ற வேண்டும் என சொல்லி இருந்தால் அது வீரம். ஆனால் உங்களுக்கு பாசிசம் வேறு. பாயாசம் வேறல்ல. பாசிசம்தான் பாயாசம். அது எப்போதும் உங்களுக்கு கசக்காது’ என பதிவிட்டிருக்கிறார்.