நாவடக்கம் வேண்டும்!.. நிதியை கொடுக்காத நீங்கள் பேசலமா?!. தர்மேந்திர பிரதானை எச்சரித்த ஸ்டாலின்!..

Photo of author

By Murugan

நாவடக்கம் வேண்டும்!.. நிதியை கொடுக்காத நீங்கள் பேசலமா?!. தர்மேந்திர பிரதானை எச்சரித்த ஸ்டாலின்!..

Murugan

stalin

இப்போது மத்தியில் தொடந்து பாஜக மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பதால் மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் ஹிந்தியை கொண்டு வர முயற்சிக்கிறது. ஆனால், ஆளும் திமுக அரசு இதை கடுமையாக எதிர்க்கிறது. யார் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். ஆனால், எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்பதே தமிழக அரசின் கொள்கையாக இருக்கிறது. இதனால் கோபமடைந்த மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினர்.

அவர் அப்படி சொன்னது தமிழத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. திமுக எம்.பி.கனிமொழி போன்றவர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அப்போது பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக தவறான பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது திமுகவினர் மிகவும் மோசமானவர்கள். அநாகரீகமானவர்கள். ஜனநாயகம் இல்லாதவர்கள்.. தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் மீது அக்கறை இல்லாதவர்கள். தமிழக மக்களிடம் அவர்கள் நேர்மையாக இல்லை’ எனவும் பேசியிருந்தார்.

இதில் கோபமடைந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தன்னை மன்னர் என எண்ணிக்கொண்டு ஆணவத்துடன் அவர் பேசி வருகிறார். நிதியை தராமல் ஏமாற்றுபவர்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களை பார்த்து அநாகரீகமானவர்கள் என பேசுவதா?’ என கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.