Tamilnadu Gov: மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசானது பிங்க் ஆட்டோ போன்ற பெண்கள் ரீதியான பல திட்டங்களை தொடங்கி வைத்தது. இது ரீதியான அறிவிப்பையும் வெளியிட்டது. அதில் ஒன்றுதான் “கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு” அதாவது மகளிர் சுய உதவி குழுவில் இருக்கும் பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பொருள்களை எடுத்து செல்லலாம் என்று கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் வரை இவர்கள் பொருட்களை எடுத்துச் செல்ல கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
இது ரீதியாக அவர்கள் கூறியிருப்பதாவது, மகளிர் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் விரைவு பேருந்தை தவிர்த்து இதர பேருந்துகளில் மகளிர் சுய உதவி குழுவில் இருக்கும் பெண்கள் தங்களது அட்டையை காண்பித்து இலவசமாக பொருட்களை எடுத்துச் செல்லலாம். இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. அதேசமயம் இவர்களுக்கு கட்டணமில்லாமல் சுமை பயணச்சீட்டும் வழங்கப்படும்.
மேற்கொண்டு இதில் சில வரைமுறைகளையும் கூறியுள்ளனர். அதன்படி எந்த ஒரு நடத்துனரும் பயணி இல்லாமல் பொருட்களை மட்டும் ஏற்றக்கூடாது. அதேபோல இலவச சுமை பயணச்சீட்டில் வரும் பெண்களிடம் மிகவும் மரியாதையுடன் ஓட்டுநர் மற்றும் நடத்தினர் இருவரும் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குரிய நேரம் இறங்கும் இடம் என அனைத்திலும் உதவிகரமாக இருக்க வேண்டும்.
இதர பயணிகளுக்கு தொந்தரவாக இருக்கும் வகையில் அதிகப்படியான சுமையை ஏற்றவோ அல்லது ஈரமான பொருட்களை எடுத்து செல்லவோ ஒருபோதும் அனுமதி தரக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். எப்படி பிங்க் பேருந்துகளை பயன்படுத்தும் பெண்களின் கட்டண தொகை அரசு திருப்பி வழங்குகிறதோ அதேபோல இந்த கட்டணமில்லா சுமை பயண சீட்டு ரீதியான பணத்தையும் கழகங்கள் துறைக்கு தவறாமல் கொடுக்க வேண்டும் என கூறி இதன் முழு பொறுப்பு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தான் எனக் கூறியுள்ளனர் .