திருமணத்திற்கு தயாரான நடிகை சமந்தா!! ராஜுடன் காதல் உண்மை தான்!!

Photo of author

By Gayathri

திருமணத்திற்கு தயாரான நடிகை சமந்தா!! ராஜுடன் காதல் உண்மை தான்!!

Gayathri

Actress Samantha ready for marriage!! Love with Raj is true!!

சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் நடிகை சமந்தா மற்றும் இயக்குனர் ராஜ் வரும் நண்பர்களாக பழகிய நிலையில் இருவரும் காதல் வயப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை தற்பொழுது திருமணம் வரை எடுத்து செல்ல போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டு சிறந்த தம்பதியினராக வளம் வந்தவர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா. திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிக்க கூடாது என சமந்தா விடம் நாக சைதன்யாவின் குடும்பத்தினர் தெரிவித்ததாகவும் சமந்தா அதனை கேட்காமல் மீண்டும் மீண்டும் திரைப்படங்கள் நடித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு தொடர்ந்து நாக சைதன்யாவின் வீட்டில் கூறியதை மதிக்காமல் சமந்தா நடித்து வந்தது தான் இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் என்று ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். விவாகரத்து பெற்ற பெண் நாக சைதன்யா நடிகை துலிபலா அவர்களை திருமணம் செய்து கொண்டு தன்னுடைய இரண்டாவது திருமண வாழ்க்கையை நடத்தி வருகிறார். எனினும் நடிகை சமந்தா அவர்கள் தான் என்றுமே சிங்கிள் தான் என்று போஸ்ட் போட்டுக் கொண்டு யாருடைய திருமணத்தை கண்டும் தன்னுடைய மனம் கலங்கவில்லை என தெரிவித்திருந்தார்.

இதனால் சமந்தாவின் ரசிகர்கள் பலரும் நாக சைதன்யாவை விமர்சித்து வந்தனர். இருவரின் உடைய விவாகரத்து முடிவிலும் தன்னை மட்டும் குறை கூறுவது எந்த விதத்திலும் சரியல்ல என நாக சைதன்யா வெளிப்படையாக தெரிவித்திருந்தார். தன்னுடைய சினிமா வாழ்க்கையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நகர்ந்த சமந்தா சிட்டாடல் வெப் சீரிஸ் இன் இயக்குனர் ராஜ் அவர்களை காதலிப்பதாகவும் இவர்கள் இருவரும் இணைந்து பல இடங்களுக்கு டேட்டிங் சென்றதாகவும் தகவல்கள் பரவின.

இதனை உறுதி செய்யும் விதமாக வலைதளங்களில் இவர்களுடைய வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் பகிரப்பட்டு வந்தது. சிறிது காலம் இந்த விமர்சனங்கள் அமைதியாக இருந்த தருணத்தில் தற்பொழுது பிறந்தநாள் விழா ஒன்று இவர்கள் இருவரும் இணைந்து நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இவர்களுடைய காதலை உறுதி செய்திருப்பதாக ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது. நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் பொழுது சமந்தாவும் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் எந்தவித தவறும் இல்லை என அவருடைய ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.