ஒரு போட்டியில் கூட தோற்காமல் வெற்றி! இந்திய அணியின் சாதனை

Photo of author

By Anand

ஒரு போட்டியில் கூட தோற்காமல் வெற்றி! இந்திய அணியின் சாதனை

Anand

நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் பட்டத்தை வென்றுள்ளது.

அந்த வகையில் ஐசிசி நடத்திய தொடர்களில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் சாம்பியன் பட்டத்தை வென்ற அணிகளின் பட்டியலை இங்கு பார்ப்போம்.

1975ம் ஆண்டு நடைபெற்ற 60 ஓவர் உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் கோப்பையை வென்றது. இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அந்த அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1996ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் உலக கோப்பை பட்டத்தை வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2003ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் மிரட்டி வந்தது. இந்தியாவுடன் மோதிய இறுதிப்போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதேபோல் 2007 உலகக் கோப்பையிலும் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

அதைத்தொடர்ந்து 2013ல் சாம்பியன்ஸ் டிராபி, 2024ல் டி20 உலகக் கோப்பை, தற்போது(2025) சாம்பியன்ஸ் டிராபி என இந்த மூன்று ஐசிசி தொடர்களிலும் இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்காமல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.