முடிவை மாற்றினார் ரோகித்! 2027 உலக கோப்பையில் இல்லை?

Photo of author

By Rupa

முடிவை மாற்றினார் ரோகித்! 2027 உலக கோப்பையில் இல்லை?

Rupa

2027ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவேனா? மாட்டேனா? என்பது குறித்து ரோஹித் சர்மா கூறியுள்ள பதில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் 2023ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரை இந்தியா நிச்சயம் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

இதனால், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. இதற்கு மௌனம் காத்த அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை வென்று பதிலடி கொடுத்தார். அதைத்தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதன்பின் ஒரு நாள் தொடரில் கேப்டனாக நீடித்து, தற்போது சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தையும் வென்று காட்டி அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் தான் அவர் ஒருநாள் தொடரில் இருந்து தான் தற்போதைக்கு ஓய்வு பெறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும், “2027 ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் வரை விளையாடுவேனா? என்பது என்னால் கூற முடியாது. தற்போதைக்கு மகிழ்ச்சியாக கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடி வருகிறேன் எதிர்காலத்தை அப்போது பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.

ஓய்வு இல்லை என்று கூறி ரோகித் சர்மா, 2027 உலகக் கோப்பை வரை விளையாடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது அவர் இப்படி கூறியிருப்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.