கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலனான ஆண்டனி என்பவரை நடிகை கீர்த்தி சுரேஷ் கோவாவில் மணமுடித்தார். இரு விட்டாரின் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கோலாகலமாக நடந்து முடிந்தது.
இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தம்பதியினரை வாழ்த்தி மகிழ்ந்தனர். இது ஒரு புறம் இருக்க தன்னுடைய கல்லூரி நாட்களில் இருந்தே கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய் அவர்களின் மிகப்பெரிய ரசிகையாக திகழ்ந்தவர். இது என்ன மாயம் திரைப்படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அவர்கள் அதன் பின்பு விஜயுடன் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். அதன் பின்பும் கூட நான் எப்பொழுதும் விஜயவர்களின் தீவிர ரசிகை என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி கொள்வதாக பல மேடைகளில் தெரிவித்ததுண்டு.
நடிகை கீர்த்தி சுரேஷ் குறிப்பு ரஜினிமுருகன் திரைப்படத்தின் இயக்குனர் பொன்ராம் தெரிவித்திருப்பதாவது :-
ரஜினி முருகன் திரைப்படத்தில் வரக்கூடிய பாடலில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் விஜய் அவர்களை இமிடேட் செய்திருக்கிறார் என பலரும் விமர்சனங்கள் தெரிவித்து வந்த நிலையில், அது அவ்வாறு இல்லை என்றும் கீர்த்தி சுரேஷ் மிகப் பெரிய விஜய் ரசிகை என்பதால் அவர் விஜயை போன்றே நடந்து கொள்கிறார் என்று பலரும் கூறுவது தவறான விஷயம் என்றும் அந்த பாடலில் கீர்த்தி சுரேஷின் உடைய இயல்பான நடை இருக்க வேண்டும் என தான் அதை பரிந்துரைத்ததாகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார் இயக்குனர் பொன்ராம்.
ஒருவர் தன்னுடைய நடையில் தன்னுடைய ஸ்டைலில் ஒரு விஷயத்தை மேற்கொள்ளும் பொழுது அது ஏற்கனவே இவருடையது அவரை போலவே இவர் செய்கிறார் என்று கூறுவதில் எந்தவித நியாயமும் இல்லை என்றும் கீர்த்தி சுரேஷ் உடைய இயல்பு அது தான் எனவே அவர் விஜய் அவர்களை பின்பற்றவில்லை என்றும் இயக்குனர் விளக்கம் அளித்திருக்கிறார்.