ஒரு பல் பூண்டு போதும்.. ஓவர் நைட்டில் தேமல் மாயமாகிவிடும்!! 100% அனுபவ உண்மை!!

Photo of author

By Divya

ஒரு பல் பூண்டு போதும்.. ஓவர் நைட்டில் தேமல் மாயமாகிவிடும்!! 100% அனுபவ உண்மை!!

Divya

தோல் பிரச்சனைகளான தேமல்,படர் தாமரை போன்றவை குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளைப் பூண்டு பற்கள் – நான்கு
2)தேங்காய் எண்ணெய் – ஐந்து தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் நான்கு வெள்ளை பூண்டு பற்களை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு பூண்டு பற்களை உரலில் போட்டு தட்டிக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் வாணலி வைத்து ஐந்து தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு வெள்ளைப்பூண்டு பற்களை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.

பிறகு அடுப்பை அணைத்தவிட்டு பூண்டு எண்ணையை நன்றாக ஆறவையுங்கள்.அதன் பிறகு எண்ணையில் இருக்கின்ற பூண்டு பற்களை நீக்கிவிட்டு ஒரு பாட்டீலுக்கு வடிகட்டி கொள்ளுங்கள்.

இந்த எண்ணையை படர்தாமரை,தேமல் மீது அப்ளை செய்து வந்தால் பாதிப்புகள் சீக்கிரம் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை – ஒரு கைப்பிடி
2)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
3)சுத்தமான தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஒரு கைப்பிடி வேப்பிலையை நன்றாக காயவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த வேப்பிலை பொடியில் இருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்ட்டை படர் தாமரை,தேமல் மீது பூசினால் அவை சில வாரங்களில் குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)குப்பைமேனி இலை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு தேக்கரண்டி குப்பைமேனி இலை பொடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலந்துவிடுங்கள்.பிறகு இந்த பேஸ்டை தேமல்,படர் தாமரை போன்ற பாதிப்புகள் குணமாகும்.அதேபோல் வேப்ப எண்ணையில் மஞ்சள் கலந்து தேமல்,படர் தாமரை மீது அப்ளை செய்து வந்தால் சீக்கிரம் மறைந்து விடும்.