தேங்காய் எண்ணெயில் இந்த பொடியை கலந்து தேய்த்தால் வெள்ளை முடி கருக்காருனு மாறும்!!

Photo of author

By Divya

தேங்காய் எண்ணெயில் இந்த பொடியை கலந்து தேய்த்தால் வெள்ளை முடி கருக்காருனு மாறும்!!

Divya

வெள்ளைமுடி பிரச்சனை இருப்பவர்கள் இந்த டிப்ஸை பின்பற்றினால் இயற்கையான முறையில் முடி கருப்பாக மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)மருதாணி இலை பொடி – நான்கு தேக்கரண்டி
2)தேங்காய் எண்ணெய் – ஐந்து தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் தரமான மருதாணி இலைகளை வெயிலில் காயவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதில் நான்கு தேக்கரண்டி மருதாணி இலை பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஐந்து தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

இந்த கலவையை தலை முழுவதும் அப்ளை செய்து நன்றாக ஊறவைக்க வேண்டும்.30 முதல் 40 நிமிடங்கள் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இப்படி செய்தால் தலைமுடி அடர் கருமையான நிறத்திற்கு மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை பொடி – இரண்டு தேக்கரண்டி
2)தயிர் – இரண்டு தேக்கரண்டி
3)மருதாணி இலை பொடி – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி மருதாணி இலை பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இரண்டு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடி சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து தலை முழுவதும் அப்ளை செய்ய வேண்டும்.

பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இப்படி செய்து வந்தால் வெள்ளை முடி கருமையாக மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)பீட்ரூட் – ஒன்று
2)மருதாணி பொடி – ஒரு தேக்கரண்டி
3)தயிர் – ஒரு தேக்கரண்டி
4)வெந்தயம் பொடி – ஒரு தேக்கரண்டி
5)தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த பீட்ரூட் சாறை கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி மருதாணி இலை பொடி சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் தயிரை ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பின்னர் வெந்தயப் பொடி மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து நன்றாக ஊறவைக்க வேண்டும்.ஒரு மணி நேரம் கழித்து தலையை அலசி சுத்தப்படுத்த வேண்டும்.இப்படி செய்தால் தலைமுடி கருமையாக மாறும்.