செலவு இல்லாமல் இளம் வயது முகச்சுருக்கம் நீங்க.. முட்டையை இப்படி யூஸ் பண்ணிட்டு வாங்க!!

Photo of author

By Divya

செலவு இல்லாமல் இளம் வயது முகச்சுருக்கம் நீங்க.. முட்டையை இப்படி யூஸ் பண்ணிட்டு வாங்க!!

Divya

இளம் வயதில் ஏற்படும் சரும சுருக்கங்களால் வயது முதுமை தோற்றத்தை அடைய நேரிடுகிறது.இந்த இளம் வயது சுருக்கங்கள் நீங்க இந்த அழகு குறிப்புகளை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
2)முட்டையின் வெள்ளைக்கரு – ஒன்று
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து எலுமிச்சையை நறுக்கி அதன் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.

பிறகு முட்டையின் வெள்ளைக்கருவை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் சுருக்கங்கள் நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)முட்டை வெள்ளைக்கரு – ஒன்று
2)மஞ்சள் தூள் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

ஒரு முட்டையை உடைத்து வெள்ளைக்கருவை மட்டும் கிண்ணம் ஒன்றில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை நன்கு கலக்க வேண்டும்.இதை முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.பிறகு வெது வெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி வந்தால் சுருக்கங்கள் நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கற்றாழை மடலின் ஜெல்லை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் கற்றாழை ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் சுருக்கங்கள் நீங்கும்.