பெற்றோர் தங்கள் குழந்தைகளை சிறு வயதிலேயே கண்டித்து வளர்த்தால் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் ஒழுக்கம் தானாக வந்துவிடும் என்று நினைக்கின்றனர்.ஆனால் பிள்ளைகளை சிறு வயதில் கண்டித்து வளர்ப்பதால் அவர்களுக்கு மன உளைச்சல் அதிகமாக ஏற்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளை அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டுமென்று சொல்லி அவர்களை மன உளைச்சலுக்கு பெற்றோர் தள்ளுகின்றனர்.பெரும்பாலான பெற்றோர் மற்ற குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகளை ஒப்பிட்டு பேசுகின்றனர்.இதனால் குழந்தைகளுக்கு இடையே கருத்து வேறுபாடு மற்றும் தாழ்வு மனப்பான்மை ஏற்படத் தொடங்குகிறது.
அதேபோல் பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்தால் பெற்றோர் அவர்களுக்கு புரியும்படி எடுத்துக் கூற வேண்டும்.உங்கள் விருப்பத்தை குழந்தைகள் மீது திணிக்காமல் இருக்க வேண்டும்.குழந்தைகளுக்கு எது நல்லது எது கெட்டது என்று பிரித்து பார்க்கும் அளவிற்கு அவர்களுக்கு பக்குவமோ அனுபவமோ கிடையாது.பிள்ளைகளிடம் அதிகமாக கடிந்து கொள்ளும் பொழுது சில விஷயங்களை அவர்கள் சொல்ல தயங்குவார்கள்.
சிறு விஷயத்தில் தொடங்கி நாளை பெரிய தவறுகளை உங்களிடம் மறைக்க தொடங்குவார்கள்.அதேபோல் சிலர் குழந்தைகளை தனித்து வளர்க்கின்றனர்.மற்ற குழந்தைகளுடன் தங்கள் பிள்ளைகளை விளையாட வைக்க வேண்டும்.இதர குழந்தைகளுடன் குழந்தைகளை பேச விட வேண்டும்.குழந்தைகளை தனித்து வைத்து வளர்த்தால் அவர்கள் மனதளவில் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
மன அழுத்தம்,மன உளைச்சல்,தனிமை உணர்வு போன்ற காரணங்களால் அவர்கள் தவறுகள் செய்ய நேரிடும்.குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும்.அவர்களுடன் நண்பர்களாக பழக வேண்டும்.குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டும்.குழைந்தைகள் தவறு செய்தால் அவர்களை மன ரீதியாக தண்டிப்பதை தவிர்க்க வேண்டும்.குழந்தைகளுக்கு எது நல்லது எது கெட்டது என்பது குறித்து பபொறுமையாக புரிய வைக்க வேண்டும்.