ADMK: அதிமுகவில் உட்கட்சி மோதலானது இருந்து வந்த நிலையில் தற்பொழுது சமரசத்தை வந்தடைந்துள்ளது. எம்ஜிஆர் காலத்திலிருந்தே இருந்து வரும் செங்கோட்டையனுக்கு போதிய மரியாதை கொடுக்கவில்லை என்பது தான் பிரச்சனை. அதுமட்டுமின்றி இவரது சொந்த ஊரிலேயே எடப்பாடி இவருக்கு எதிராக ஆள் அமர்த்தி அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார் . இது ரீதியாக தான் செங்கோட்டையன் சமீப காலமாக எடப்பாடியை புறக்கணித்து வந்துள்ளார்.
இது முதன் முதலில் அத்திக்கடவு வழக்கு ரீதியாக விவசாயிகள் எடப்பாடிக்கு பாராட்டு விழா அமைத்த போது தொடங்கியது. தற்போது நடந்து வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டுத்தொடர் வரை நீடித்து வந்தது. நேற்று சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக கொண்டு வந்த போது டிவிசன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் எடப்பாடி-யுடன் நின்று தனது தரப்பு வாக்கை செங்கோட்டையன் கொடுத்தார். கேபி முனுசாமி இவரை சமாதானம் படுத்தியதால் தான் இது நடந்தது என்று கூறினாலும் அதிமுக நிர்வாகிகள் இதனை கண்டு நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.
இவ்வாறு இருந்த சூழலில் இன்று சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை ரீதியான பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. அப்படி நடைபெற்ற போது எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி செங்கோட்டையன் பேசுவதற்கும் அனுமதி தர வேண்டும், இவர் முன்னாள் கல்வித்துறை அமைச்சராக இருந்துள்ளார் என சபாநாயகரிடம் கேட்டுள்ளார். இருவரும் ஒவ்வொரு கூட்டத்திலும் ஒருவருக்கொருவர் பெயரை கூட குறிப்பிடாமல் புறக்கணித்து வந்த நிலையில், செங்கோட்டையனுக்காக எடப்பாடி முன்வந்து பேசியது அதிமுக நிர்வாகிகளிடையே திக்கற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல இதைப் பார்த்த ஆளும் கட்சிக்கும் சற்று வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.