DMK: திமுகவுக்கும் ஆளுநருக்கும் ஒருபோதும் பஞ்சாயத்து என்பது ஓய்வதில்லை. ஆளுநரும் திமுகவிற்கு எதிரான சனாதனம் குறித்து பேசுவது, தமிழக உரையை புறக்கணிப்பது என செய்து வந்தார். தற்பொழுது அமலாக்கத்துறை விடாது, திமுக – வை டாஸ்மாக் நிறுவனம் சார்ந்த பலவற்றில் சோதனை செய்து வருகிறது. அவ்வாறு செய்த சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அறிக்கையும் வெளியிட்டுள்ளது. இது ரீதியாக ஆளும் திமுகவை கண்டித்து பாஜக சார்பாக அண்ணாமலை உள்ளிட்டோர் நேற்று போராட்டம் நடத்தினர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் மாலை 6:00 மணி ஆகியும் விடுவிக்காத நிலையில் இறுதி கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுவித்தனர். அதுமட்டுமின்றி தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ரீதியாக தான் இப்படி அமலாக்கத்துறை வைத்து பல்வேறு சோதனைகளை செய்து வருவதாகவும் திமுக குற்றம் சாட்டியுள்ளது. இப்படி தமிழக அரசியல் சூழல் பரப்பரப்பாக இருக்கும் பட்சத்தில் நேற்று ஆளுநர் ரவி டெல்லிக்கு சென்றுள்ளார். மூன்று நாட்கள் தொடர்ந்து டெல்லியில் இருக்கும் அவர் அமித்ஷா, கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்திய கல்வித்துறை மந்திரியை சந்தித்து மும்மொழி கொள்கை குறித்து விவாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாம். பெரும்பாரியான எதிர்ப்பை தமிழகம் போன்ற அரசுகள் இதற்கு தெரிவித்திருப்பதால் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறியுள்ளனர். மேற்கொண்டு அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து அமித்ஷாவிடம் கலந்தோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாம். அப்படி எடுக்கப்படும் பட்சத்தில் திமுகவுக்கு எதிரான பல உத்தரவுகள் ஆளுநர் தமிழகத்திற்கு வந்த பிறகு போடப்படும்.