இசைப் புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் பிறப்பிலேயே இஸ்லாமிய மதத்தில் பிறக்கவில்லை. அதற்கு மாறாக திலீப் குமார் என்ற தனது பெயரை மதம் மாறியதால் ஏ ஆர் ரகுமான் என மாற்றி அமைத்திருக்கிறார். மதம் மாறிய பொழுது அவருக்கு ஏற்பட்ட சிக்கல்கள் அதிலிருந்து அவர் விடுபட்ட விதம் குறித்து ஒளிப்பதிவாளர் ராஜுவ் மேலும் அவர்கள் தெரிவித்திருப்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் கூறியிருப்பதாவது :-
ஏ ஆர் ரகுமான் அவர்கள் குடும்பத்தோடு இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பொழுது ஆரம்ப காலகட்டத்தில் ஹிந்தி தெரியாமல் தவித்ததாகவும் அப்பொழுது அவர்களுக்கு மொழி பெயர்த்து கொடுக்கக்கூடியவராக தான் இருந்ததையும் சுட்டிக்காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜுவ். திடீரென இஸ்லாமிய மதத்திற்கு மாறியதால் பல சிக்கல்களை ஏ ஆர் ரகுமான் அவர்கள் சந்தித்ததாகவும் அதிலும் குறிப்பாக தன்னுடைய சகோதரிகளின் திருமண விஷயத்தில் அவர் மிகவும் கடினமான ஒரு சூழலை சந்தித்த பொழுது அவருடைய இசை மட்டுமே அவருக்கு கை கொடுத்தது என்றும் தெரிவித்திருக்கிறார். பொதுவாகவே ஒருவருக்கு கஷ்டம் என்றால் அவர்கள் ஏ ஆர் ரகுமான் இசையை கேட்டு தங்களுடைய கஷ்டத்தை போக்கிக் கொள்வார்கள் என்றும் ஆனால் ஏ ஆர் ரகுமான் அவர்களோ இசையமைத்து தன்னுடைய கஷ்டங்களை போக்கிக் கொள்வார் என்றும் ஒளிப்பதிவாளர் தெரிவித்திருப்பது ரசிகர்களின் மனதை உருக்குவதாக அமைந்திருக்கிறது.
ஏ ஆர் ரகுமான் அவர்கள் எப்பொழுதும் நேர்மறையாக பாசிட்டிவாக இருக்கக்கூடிய மனிதர் என்றும் கஷ்டங்கள் அனைத்தையும் என்னால் மறக்க முடிகிறது என்றால் அது இசையால் மட்டும் தான் என அவர் அடிக்கடி தெரிவிப்பதாகவும் ஒளிப்பதிவாளர் தெரிவித்திருக்கிறார். பொதுவாக நமக்கு ஒரு பிரச்சனை என்றால் கடவுளை திட்டுபவர்களே அதிகம் ஆனால் ஏ ஆர் ரகுமான் அவர்களோ இசையின் மூலம் நான் தெளிவு பெறுவதற்காகவே கடவுள் எனக்கு இவ்வளவு பிரச்சனைகளை கொடுத்திருக்கிறார் என பிரச்சனையைக் கூட நேர்மறையான எண்ணங்களோடு பார்க்கக் கூடியவர் என ஒலிப்பதிவாளர் ராஜுவ் மேனன் தெரிவித்திருக்கிறார்.