ரேஷன் அட்டைதாரர்களுக்கு செக்..!! மார்ச் 31ஆம் தேதியே கடைசி..!! மிஸ் பண்ணிட்டா இனி பொருட்கள் வாங்க முடியாது..!!

Photo of author

By Vinoth

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செக்..!! மார்ச் 31ஆம் தேதியே கடைசி..!! மிஸ் பண்ணிட்டா இனி பொருட்கள் வாங்க முடியாது..!!

Vinoth

மார்ச் 31ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினரின் கைரேகையையும் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், ரேஷன் கடைகள் மூலம் ஏராளமான ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதால், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் தான், ரேஷன் கடைகளில் நடக்கும்  குளறுபடிகளை தவிர்க்க ரேஷன் கார்டுகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்ய வேண்டுமென கட்டாயமாக்கப்பட்டது.

மத்திய அரசின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டில் குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகையும் ரேஷன் கடைகளில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தங்கள் கை ரேகையை பதிவு செய்யவில்லை என்றாலோ, குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்கவில்லை என்றாலோ குடும்ப அட்டை நிராகரிக்கப்படலாம் அல்லது ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மார்ச் 31ஆம் தேதிக்குள் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ரேஷன் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.