கேம் சேஞ்சர் திரைப்படம் ஓடாததற்கு பிரபுதேவா தான் காரணம்!! இசையமைப்பாளர் தமன் ஓபன் டாக்!!

Photo of author

By Gayathri

கேம் சேஞ்சர் திரைப்படம் ஓடாததற்கு பிரபுதேவா தான் காரணம்!! இசையமைப்பாளர் தமன் ஓபன் டாக்!!

Gayathri

Prabhu Deva is the reason why Game Changer movie didn't run!! Music composer Thaman opens up!!

பிரம்மாண்டங்களின் இயக்குனர் என அனைவராலும் அழைக்கப்படக்கூடிய ஷங்கர் அவர்களுக்கு சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் எதுவுமே மிகப்பெரிய வெற்றியை அளிக்கவில்லை. அதற்கு மாறாக படங்கள் தோல்வியையே சந்தித்தன. இதனால் ரசிகர்கள் பலரும் ஷங்கருக்கு சரக்கு தீர்ந்து விட்டது என்றும் அவரால் ட்ரெண்டிங்கில் படங்களை இயக்க முடியவில்லை என்றும் பலவாறு தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில் தான் எப்படியாவது ஒரு நல்ல படத்தை கொடுத்து மீண்டும் தன் இடத்தை பிடித்துக் கொள்ள வேண்டும் என நினைத்த சங்கர் அவர்கள் கேம் சேஞ்சர் படத்தை எடுப்பதற்கு முடிவு செய்திருக்கிறார். இந்த கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரைக்கதையானது கொரோனா காலகட்டத்தில் ஜூம் மீட்டிங் ஒன்று நடைபெற்றதாகவும் அதில் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன ஒரு வரி பிடித்துப் போனதை வைத்து சங்கர் அவர்கள் முழு கதையையும் உருவாக்கி இந்த திரைக்கதைக்கு ராம்சரண் ஹீரோவாக கமெண்ட் செய்த அவரோடு அஞ்சலி கியாரா அத்வானி எஸ் ஜே சூர்யா பலரையும் நடிக்க வைத்த நேரடி தெலுங்கு படமாக உருவாக்கி வெளியிட்டார்.

கேம் சேஞ்சர் திரைப்படமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததற்கு காரணம் என்ன என்பது குறித்து இசையமைப்பாளர் தமன் தெரிவித்திருப்பதாவது :-

கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் அவர்கள் தான் பாடல்களை இயக்கியிருக்கிறார். தன்னுடைய பாடல்கள் வெற்றி பெறாததற்கு காரணம் அந்த பாடல்களுக்கு ஒரு நல்ல நடன அசைவுகள் இல்லை என்றும் தன்னால் ஒரு பாடலுக்கு 25 மில்லியன் வியூஸ் வரை கொண்டுவர முடியும் என்றும் ஆனால் அதனை திரையில் கொண்டு வரும் பொழுது நடன இயக்குனரால் அந்தப் பாடலுக்கு கொடுக்கப்படும் ஒரு ஹூக் ஸ்டெப் தான் ரசிகர்களின் மனதை சென்றடையும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் வரக்கூடிய பாடல்களில் இது போன்ற ஒரு ஹூக் ஸ்டேப் இல்லை என்றும் அவ்வாறு இருந்தால்தான் கேமராமானுக்கு அந்த பாடலை சரியாக படம் பிடித்து திரையில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ள முடியும் என்றும் இது மிகப்பெரிய தவறாக உள்ளதால் தான் ரசிகர்களிடையே கனெக்ட் செய்து கொள்ள முடியவில்லை என தெரிவித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு நடன இயக்குனர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.